a man married two cousin sisters, a man married two cousin sisters same time, ஒரே மேடையில் இரண்டு பெண்களுடன் திருமணம், two cousin sisters marry same man in same time, மத்தியப் பிரதேசத்தில் ஒரே மேடையில் இரண்டு பெண்களுடன் திருமணம், வைரல் வீடியோ, two cousin sisters marry same man in same mandap, two sisters marry a man in madhya pradesh viral video
மத்தியப் பிரதேசத்தில் ஒருவர் ஒரே மண மேடையில் சகோதரிகள் இரண்டு பேரை திருமணம் செய்துகொண்ட நிகழ்வு இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரல் ஆகியுள்ளது.
Advertisment
குழந்தைகள் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக, முதன்முறையாக திருச்சியில் ஒருவர் கைது...
மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பிந்த் மாவட்டத்தில் கவுதவிளி கிராமத்தைச் சேர்ந்தவர் திலிப் என்கிற தீபு பரிஹார் (35) இவர். இவருக்கு சர்பாஞ்ச் கவுதவிளியைச் சேர்ந்த வினிதா என்ற பெண்ணை 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும் 1 ஆண் குழந்தையும் உள்ளனர்.
Advertisment
Advertisements
இந்த நிலையில்தான், தீபு பரிஹாருக்கு முதல் மனைவியின் சம்மதத்துடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வில் தீபு பரிஹார் முதல் மனைவி வினிதாவையும் அவருடைய சகோதரி ரச்னா (22) என்ற பெண்ணையும் ஒரே மணமேடையில் ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளார்.
திருமணத்தில், தீபு பரிஹார் இரண்டாவது மனைவி ரச்னாவுக்கு தாலி கட்டிய பிறகு மாலை மாற்றுகிறார். இதையடுத்து, முதல் மனைவி வினிதாவுடனும் மாலை மாற்றி திருமண செய்துள்ளார். இந்த நிகழ்வை திருமணத்தில் கலந்துகொண்ட ஒருவர் செல்போனில் வீடியோ பதிவு செய்து ஒரே மணமேடையில் ஒரே நேரத்தில் சகோதரிகளை திருமணம் செய்துகொண்ட மணமகன் என்று பகிர இந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரலானது.
இந்த திருமணம் குறித்து, தீபு பரிஹார் ஊடகங்களிடம் கூறுகையில், “நான் வினிதாவை ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டேன். எங்களுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். வினிதா உடல்நிலை சரியில்லாமல் உள்ளார். எங்கள் குழந்தைகளை யாராவது கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக இப்போது, நான் வினிதாவின் சம்மதத்துடன் ரச்னாவை திருமணம் செய்துகொண்டேன்.” என்று கூறினார்.
தீபு பரிஹார் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்ட ரச்னா, முதல் மனைவி வினிதாவின் ஒன்றுவிட்ட சகோதரி ஆவார்.
தீபு பரிஹார் - வினிதா - ரச்னா திருமண நிகழ்வு இணையத்தில் வைரல் ஆனதைத் தொடர்ந்து, சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்து திருமணச் சட்டப்படி முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்ளக் கூடாது. அப்படி திருமணம் செய்துகொண்டால் அது குற்றமாகும்.
இந்த திருமணம் குறித்து பிந்த் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இது குறித்து இன்னும் புகார் எதுவும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.