கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எர்ணாடு தாலுகாவில் பன்டிகாடு காவல் நிலையம் அமைந்துள்ளது. இந்த காவல் நிலைய அதிகாரிகள் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது, இளைஞர் ஒருவர் தலைகவசம் இல்லாமல் வாகனம் ஓட்டிச் சென்றார். அவரை நிறுத்தி காவலர் ஒருவர் அபராதம் விதித்தார்.
Advertisment
அந்த இளைஞரும் பொறுமையாக அபராதம் கட்டிவிட்டு அந்த இடத்திலேயே நின்றுகொண்டிருந்தார். சிறிது நேரத்தில் சம்பந்தப்பட்ட காவலரின் உருவப்படத்தை ஓவியமாக வரைந்து அவருக்கே பரிசளித்தார்.
இதைப் பார்த்து இன்ப அதிர்ச்சி அடைந்த காவலர், செய்வதறியாது ஒரு கணம் திகைத்து தன் புகைப்படத்தை வாங்கிக் கெண்டு புன்முறுவலாக பார்த்தார்.
தொடர்ந்து இந்தச் செய்தியை ரோந்து வாகனத்தில் இருந்த சக காவல் அதிகாரியிடம் கூறினார். அவரும் அந்தப் புகைப்படத்தை பார்த்து பெருமகிழ்ச்சி அடைந்தார். இது தொடர்பாக வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“