New Update
/indian-express-tamil/media/media_files/SreRbjE7s8WwCL90XNad.jpg)
சென்னை விமான நிலையத்தில் மேட்ரிமோனி விளம்பரம் வைரலாகி வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் உள்ள மேட்ரிமோனி அலுவலகத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த அலுவலகம் நகைச்சுவையான கருத்துக்களை பெற்றுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் மேட்ரிமோனி விளம்பரம் வைரலாகி வருகிறது.
சென்னை விமான நிலையத்தில் உள்ள பாரத் மேட்ரிமோனி ஸ்டோரின் புகைப்படம் சமூக ஊடக தளமான ட்விட்டர் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டது.
இந்நிலையில் சில மணி நேரங்களில் படம் வைரலானது. பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டுள்ளனர்.
இதில், பதில்கள் நகைச்சுவையாக இருந்ததைப் போலவே வித்தியாசமாக இருந்தன. ஒருவர், “அவர்கள் லவ் இஸ் இன் தி ஏர் என்ற மேற்கோளை உண்மையில் எடுத்துக் கொண்டனர்” எனத் தெரிவித்துள்ளார்.
Genuinely want insights behind having a Bharat matrimony counter at an airport. pic.twitter.com/A6jM4rwG4F
— Rajat Dutta (@RajatDutta13) July 26, 2024
மற்றொருவர், “விமானம் தரையிறங்கியவுடன் திடீரென திருமணம் செய்து கொள்ள உத்வேகம் பெறக்கூடிய பயணிகளுக்கு இது சாதகமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் உள்ள மேட்ரிமோனி ஸ்டோர் மக்களின் கவனத்தை ஈர்ப்பது இது முதல் முறை அல்ல. 2023 இல், @Aarsun என்ற 'எக்ஸ்' சமூக ஊடக பயனர் அதே விமான நிலையத்தில் உள்ள "திருமண தகவல் நிலையம்" ஒனறின் இதே போன்ற படத்தைப் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.