/tamil-ie/media/media_files/uploads/2019/12/onion.jpg)
onion, mumbai, onion pirice highh, onion price getting high, onion price memes, onion bulk photo, வெங்காய மூட்டை புகைப்படம், வெங்காய புகைப்படம் வைரல், வெங்காய விலை உயர்வு, onion photo viral, mumbai onion, memes, jokes, viral photo, mumbai, viral news, Tamil indian express, sack of onions out side of mumbai hotel gone viral
கடந்த சில வாரங்களில் வானத்தை தொட்ட வெங்காய விலை அடுத்தடுத்த நாட்களில் வானத்தையும் தாண்டி உயர்ந்துகொண்டிருக்கிறது. இதனால், வெங்காய விலை உயர்வை குறிப்பிடும் விதமாக தங்கத்தின் விலையோடும் வைரத்தின் விலையோடும் ஒப்பிட்டு சமூக ஊடகங்களில் கிண்டல் செய்தும் விமர்சித்தும் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், மும்பையில் பூட்டப்பட்ட ஒரு ஹோட்டலுக்கு முன்பு யாருமில்லாத இடத்தில் நாதியற்று விலை உயர்ந்த வெங்காய மூட்டை இருந்தது. இதனைப் பார்த்த அவ்வழியாக சென்ற ஒருவர் விலை உயர்ந்த வெங்காய மூட்டை பாதுகாப்பில்லாமல் நாதியற்றுக் கிடப்பதால் யாராவது திருடிக்கொண்டு செல்லப்போகிறார்கள் என்று ஒரு புகைப்படம் எடுத்து பதிவிட்டார்.
கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
அவ்வளவுதான் அடுத்த சில மணிநேரங்களில் அந்த வெங்காய மூட்டை புகைப்படம் டுவிட்டரில் வைரல் ஆனது.
சமூக ஊடகமான டுவிட்டரில் ஒவ்வொரு நாளும் பல விதமான செய்திகள் வைரல் ஆகி வருகிறது. ஆனால், முதல் முறையாக ஒரு வெங்காய மூட்டை வைரல் ஆகி உள்ளது.
இந்த புகைப்படத்தில் வெங்காய மூட்டை உள்ள ஹோட்டல் மும்பையில் உள்ள ஹோட்டல் டெல்லிவாலா கா என்று காட்டுகிறது. அதனால், சிலர் டெல்லி மக்கள் குழப்பமடைய வேண்டாம் என்று குறிப்பிட்டு கிண்டல் செய்துள்ளனர்.
Believe it or not. Is this is how safe mumbai is? A sack of onions placed outside a restaurant to be picked up when it opens. pic.twitter.com/CVrLyKSlrV
— Mumbai Paused (@SloganMurugan) December 2, 2019
அதே போல, எப்படி மும்பையில் விலை உயர்ந்த மூட்டை பாதுகாப்பாக உள்ளது என்று ஒருவர் நகைச்சுவையுடன் கேள்வி எழுப்பியுள்ளார்.
How do you know if a restaurant is owned by a don? https://t.co/yItzpPiwhq
— Hari Nair (@thelonghol) December 3, 2019
அதே போல, மற்றொருவர் இந்த வெங்காய மூட்டை இருக்கிற ஹோட்டல் தாதாவுடையது என்று உங்களுக்கு எப்படி தெரியும் அதனால்தான் வெங்காய மூட்டை பாதுகாப்பாக உள்ளது என்று நகைச்சுவையாக கூறியுள்ளார்.
How do you know if a restaurant is owned by a don? https://t.co/yItzpPiwhq
— Hari Nair (@thelonghol) December 3, 2019
மற்றொருவர் இந்த நாட்டில் வெங்காயத்துக்கு பாதுகாப்பு இருக்கிறது. ஆனால், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறியுள்ளார்.
மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?
வெங்காய விலை உயர்வால் பல ஹோட்டல்களில், வெங்காயம் அதிகம் பயன்படுத்தப்படும் உணவுவகைகளை சமைப்பதை நிறுத்திவிட்டதாகவும் வெங்காயத்தை மிகவும் குறைவாக பயன்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில்தான், ஹோட்டல் முன்பு தனியா கிடக்கும் வெங்காய மூட்டை வைரம் கணக்கா வைரல் ஆகியுள்ளது. உண்மையில், வைரம் கூட இப்படி வைரல் ஆனதில்லை என்பதுதான் நிதர்சனம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
 Follow Us