சென்னை ஓட்டேரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் கோதண்டபாணி. இவரது 10 வயது மகள் விருதிக்ஷா.
இவருக்கு 3 வயது முதல் சிறுநீரக பிரச்னை இருந்துள்ளது. இதையடுத்து எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்றுவந்தார்.
அவருக்கு அளிக்கப்பட்ட மாத்திரைகளின் எதிர்வினை காரணமாக கால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதாவது அவரது வலது கால் பாதத்தில் கடுமையாக அரிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து ராஜிவ் காந்தி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவரது காலில் ரத்த உறைவு இருப்பது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை காரணமாக வலிப்பு நோய் ஏற்பட்டதாக கோதண்டபாணி குற்றஞ்சாட்டினார். தொடர்ந்து, சென்னை தலைமை செயல சாலையில் தனது மகளுக்கு நீதி கோரிஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அப்போது தனது போராட்டத்துக்கு காக்கி உடை தடையாக இருக்குமானால் அது எனக்கு வேண்டாம் சார் என்றார். தொடர்ந்து, மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
இதற்கிடையில் தன்னையும், தன் மகளையும் கருணைக் கொலை செய்யுங்கள் என்று மனு அளித்துள்ளதாகவும் அவர் வருத்தத்துடன் தெரிவித்தார். இது காண்போர் நெஞ்சை கதிகலங்க செய்யும் வகையில் இருந்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“