New Update
/tamil-ie/media/media_files/uploads/2023/02/Karunanithi.jpg)
கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னம் அமைத்த தொண்டர்
ரூ.3 லட்சம் செலவு, இரு மாத உழைப்பில் இந்தப் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி நினைவாக பேனா நினைவு சின்னம் அமைத்த தொண்டர்
ஒரு பேனாவுக்கு இத்தனை அக்கப் போரா? என்று கேட்கும் அளவுக்கு தமிழ்நாடு அரசியல் களம் மாறியுள்ளது.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல் அமைச்சருமான கருணாநிதியின் நினைவாக பேனா நினைவுச் சின்னம் மெரினா கடலுக்குள் அமைக்கப்படும் என மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த பேனா நினைவுச் சின்னம் ரூ.87 கோடியில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு சூழலியல் ஆய்வாளர்கள், நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
சசிகலா, தினகரன் போன்ற எதிர்க்கட்சித் தலைவர்களும் பேனா தேவையில்லை என்றே கூறிவருகின்றனர்.
இந்தக் களோபரத்துக்கு மத்தியில் புதிதாக கட்டிய வீட்டில் 16 அடி உயர பேனா நினைவுச் சின்னம் அமைத்துள்ளார் திமுக தொண்டர் ஒருவர்.
மேலும் அந்தப் பேனா சின்னத்துக்கு கீழ், “தலைவரே உந்தன் விரல்களில் ஒன்றாய் திகழ்ந்த எழுதுகோலாய் மாறிட ஆசை” எனவும் பொறித்துள்ளார். அந்த வீட்டுக்கு லியோ எனப் பெயரிடப்பட்டு உள்ளது.
இது குறித்து வீட்டின் உரிமையாளர், “கருணாநிதி பேனாவின் கையெழுத்தினால் பலர் நல்லவிதமாக இருக்கின்றனர். பெண்களுக்கு சொத்து உரிமை உண்டு என அவர் கையெழுத்து போட்டதால்தான் பெண்கள் சந்தோஷமாக இருக்கின்றனர்.
இதற்கு ரூ.3 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். கிட்டத்தட்ட 2 மாத கால உழைப்பு தேவைப்பட்டது” என்றார். இந்தப் புகைப்படங்களை தற்போது திமுகவினர் வைரலாக்கிவருகின்றனர்.
(நன்றி: பாலிமர் தொலைக்காட்சி)
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.