New Update
/
கோவை காந்திபுரம் 100 அடி ரோடு கலா ஸ்டோர்ஸ் அருகே பாதாள சாக்கடை குழிகள் திறந்த வண்ணம் இருந்தது. பாதாள சாக்கடையை சுத்தம் செய்ய திறந்த கோவை மாநகராட்சியினர், அதனை மூடாமல் அப்படியே விட்டு சென்றனர். கடந்த 16 ஆம் தேதி அன்று அந்த நடை பாதையில் சென்ற பெண் ஒருவர் பாதாள சாக்கடை குழிக்குள் தவறி விழுந்தார். அவரது காலில் சிறிது காயம் ஏற்பட்டது.
அந்தப் பெண் பாதாள சாக்கடை குழிக்குள் தவறி விழுந்தது தொடர்பான சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி இருந்தது. இது பொது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது கூடிய விரைவில் சரி செய்யப்படும் என தெரிவித்தனர்.
இந்த நிலையில், பாதாள சாக்கடை குழிக்குள் பெண் ஒருவர் விழுந்து விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து, கோவை மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்தில் பாதாள சாக்கடை குழிகளை மூடினர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கோவை மாநகராட்சி அதிகாரிகள் பாதாள சாக்கடையின் அனைத்து குழிகளிலும் உடனடியாக சிலாப்புகள் மூலம் குழிகளை மூடினர். மேலும், பாதாள சாக்கடை குழி மூடாமல் இருந்ததால் பெண் உள்ளே விழுந்து காயமடைந்த விவகாரத்தில் ஒப்பந்ததாரருக்கு ரூ. 50,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Video: கோவை காந்திபுரம் 100 அடி ரோடு அருகே பெண் ஒருவர், எதிர்பாரத விதமாக திறந்திருந்த சாக்கடையில் விழுந்தார். இதில் அந்த பெண்ணுக்கு காலில் சிறிது காயம் ஏற்பட்டது
— Indian Express Tamil (@IeTamil) June 18, 2024
மாநகராட்சி ஊழியர்கள் அப்பகுதியில் சுத்தம் செய்த பிறகு சாக்கடை மேல் மூடியை மூடாமல் அப்படியே போட்டு சென்று உள்ளனர் pic.twitter.com/COGosGaKUy
பாதாள சாக்கடை குழிக்குள் பெண் ஒருவர் விழுந்து விபத்து: குழிகளை மூடிய கோவை மாநகராட்சி ஊழியர்கள்!https://t.co/gkgoZMHWlc | #CoimbatoreCorporation | #video | 📹 @rahman14331 pic.twitter.com/ZcXTduMGhc
— Indian Express Tamil (@IeTamil) June 18, 2024
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.