2017-ஆம் ஆண்டுக்கான இந்தி வார்த்தையாக ’ஆதார்’ என்ற வார்த்தையை ஆக்ஸ்ஃபோர்டு அகராதி அறிவித்துள்ளது. ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற இலக்கிய திருவிழாவில் இந்த அறிவிப்பு வெளியானது. ஆதார் வார்த்தையை இந்தாண்டுக்கான வார்த்தையாக குறிப்பிட்டதற்கு நெட்டிசன்கள் பலரும் சமூக வலைத்தளங்களில் கேலி செய்து வருகின்றனர்.
வங்கி கணக்கு முதல் மொபைல் எண் வரை அனைத்தையும் ஆதாருடன் இணைக்க வேண்டும் என்ற கட்டாயம் நிலவி வரும் நிலையில், ஆக்ஸ்ஃபோர்டுடன் ஆதார் இணைந்துவிட்டதாக நெட்டிசன்கள் கேலி செய்துவருகின்றனர். ஏற்கனவே ட்விட்டர், முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆதார் குறித்த ஜோக்குகள் எங்கெங்கிலும் பரவி கிடக்கின்றன.