Aadhaar card – TN EB number link memes in tamil: தமிழகத்தில் அனைத்து வீட்டு நுகர்வோருக்கும் 100 இலவச யூனிட்கள் உட்பட மானியம் பெற மின் நுகர்வோர் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதை தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது. கடந்த அக்டோபர் 6 தேதி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில், மானியத் திட்டங்களின் பலன்களைப் பெற விரும்பும் தகுதியுள்ள தனிநபர் ஆதார் எண் வைத்திருப்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதார் அங்கீகாரத்திற்கு உட்படுத்த வேண்டும் என்று தெரிவித்தது.
எனினும், மின் நுகர்வு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க காலக்கெடு எதுவும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், மின் நுகர்வோர்கள் அவசர அவசரமாக தங்கள் ஆதார் எண்ணை மின் நுகர்வு எண்ணுடன் இணைத்து வருகிறார்கள். இதற்காக, தமிழக மின்சார வாரிய துறை இணைய பக்கத்தை திறந்துள்ளது. ஆனால், மின் நுகர்வோர்கள் பலரும் ஒரே நேரத்தில் ஆதார் எண்ணை இணைக்க முயற்சிப்பதால் சர்வர் லோடு ஆகுவதில் அவ்வப்போது சிக்கல் ஏற்பட்டு வருவதாக மின் நுகர்வோர்கள் தெரிவித்துள்ளனர்.
இணையத்தை தெறிக்க விடும் ‘ஆதார் இணைப்பு’ மீம்ஸ்
இது ஒருபுறமிருக்க, ஆதார் – மின் நுகர்வு எண் இணைப்பை கையில் எடுத்துள்ள மீம்ஸ் கிரியேட்டர்கள் சுவையான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். அவை இணைய வாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு இணைய பக்கங்களில் வைரலாகி வருகிறது. அவற்றில் சில மீம்ஸ்களை இங்கு பார்க்கலாம்.
இணையத்தை தெறிக்க விடும் ‘ஆதார் இணைப்பு’ மீம்ஸ்
ஒரு மீம்ஸ் கிரியேட்டர் பகிர்ந்துள்ள மீம்ஸில், ‘அடுத்த கட்டமாக கணவன் ஆதாரை, மனைவி ஆதாருடன் தான் இணைக்க வேண்டும். அப்போது தான் போலியாக எவ்வளவு உள்ளது என்பதை கண்டு பிடிக்க முடியும் என்பது போல் மீம்ஸ் போட்டுள்ளார்.

இணையத்தை தெறிக்க விடும் ‘ஆதார் இணைப்பு’ மீம்ஸ்



தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil