ஆடிப்பெருக்கு விழாவின் போது 50 அடி உயரமுள்ள ராட்சத ரங்க ராட்டினம் திடீரென பழுதடைந்து நின்று, லேசாக சாய்ந்ததால் ராட்சத சக்கரத்தில் அந்தரத்தில் இருந்த மக்கள் குழப்பத்திலும் பீதியிலும் கூச்சலிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் வெளியான இந்த வீடியோவின் படி, திருப்பத்தூர் மாவட்டம், பசிலிக்குடையில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் திருவிழாவில் ராட்சத ரங்கராட்டினம் அமைக்கப்பட்டது.
இந்த ராட்சத ரங்க ராட்டின சக்கரம் திடீரென இடது பக்கம் சாய்ந்ததால், பல ஆண்களும் பெண்களும் அதிலிருந்து தப்பிக்க முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உடனடியாக, ராட்சத ரங்க ராட்டினத்தில் சுற்றுவதற்கு அமர்ந்திருந்த அனைவரையும் அதிலிருந்து பாதுகாப்பாக மீட்டனர்.
ஆடிப்பெருக்கு திருவிழாவில் ராட்சத ரங்க ராட்டினம் பழுதடைந்ததால் பீதியில் கூச்சலிட்ட மக்கள்; வைரல் வீடியோவைப் பாருங்கள்:
சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோ நெட்டிசன்களிடம் இருந்து பலவித்மான கருத்துகளைப் பெற்றுள்ளது. இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர், “அவர்கள் அனைவரும் நலமாக இருக்கிறார்கள் என்று நம்புகிறேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மற்றொரு பயனர், “இதுபோன்ற சவாரிகளை முயற்சிக்காமல் இருப்பது நல்லது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
“இந்த ஆண்டு பல துயரங்கள் நடந்துள்ளன” என்று மூன்றாவது பயனர் கூறினார்.
பருவமழையை சிறப்பிக்கும் வகையில் கொண்டாடப்படும் ஆடிப்பெருக்கு விழா ஆகஸ்ட் 3-ம் தேதி நடைபெற்றது. இந்த ஆடிப் பெருக்கு விழா தமிழ் மாதமான ஆடி 18-ம் நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருச்சி காவிரி ஆற்றங்கரையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடிப் பெருக்கு நீராடக் குவிந்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“