பாகிஸ்தான் ராணுவப்பிடியில் இருந்து இந்தியா திரும்பிய விமானப் படை வீரர் அபினந்தன் மீசை இந்தியா முழுவதும் பிரபலமாகி வருகிறது.
பாகிஸ்தானில் பிடியில் இருந்த அபினந்தன் வர்தமான் கடந்த வெள்ளிக்கிழமை இந்தியா திரும்பினார். அவரை பொதுமக்கள் அனைவரும் இந்திய கொடி அசைத்து வரவேற்றனர். இந்திய விமானப்படை வீரர் பாகிஸ்தான் எஃப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தினார். ஆனால் அதே தாக்குதல் சமயத்தில் இவரது விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டு பாகிஸ்தான் ராணுவத்தின் பிடியில் சிக்கினார். பிறகு பாகிஸ்தான் ராணுவம் அவரிடம் பல தகவல்களை கேட்டப்போதும், அவர் அதற்கு பதில் அளிக்க மறுத்தார். அவரின் அந்த வீடியோக்கள் வெளியான நொடியில் இருந்தே மக்கள் அவரின் ரசிகராக மாறிவிட்டனர்.
அபினந்தன் மீசை
அன்றிலிருந்து அபினந்தன் மீசை நாடு முழுவதும் பிரபலமானது. திரைப்படங்களில் வரும் ஹீரோக்களை பார்த்து ரசிகர்கள் ஹேர்-கட் செய்வது, மீசை வைப்பது, தாடி வைப்பது என சுற்றி வருவார்கள். ஆனால் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விமானப்படை வீரர் தாக்குதலுக்கு பிறகு அபினந்தன் மீதுள்ள மதிப்பும் மரியாதையும் அதிகரித்தது.
அதனைத் தொர்ந்து இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை பலரும், அபினந்தன் போலவே அருவா மீசை வைத்துக்கொள்ள தொடங்கியுள்ளனர். குறிப்பாக சலூன்களில் அவரின் மீசையை புகைப்படமாக வெளியே வைத்து விரும்புபவர்கள் இந்த ஸ்டைலையும் செய்துக் கொள்ளலாம் என்று தெரிவித்து வருகின்றனர். அந்த அளவிற்கு அவரின் புகழ் பரவியிருக்கிறது.
March 2019Wing Commander #AbhinandanVarthaman's moustache style getting popular. A Bengaluru local Mohammed Chand says,' I'm his fan, we follow him. I like his style. He is the real hero; I'm happy.' pic.twitter.com/cT7QGXntMs
— ANI (@ANI)
Wing Commander #AbhinandanVarthaman's moustache style getting popular. A Bengaluru local Mohammed Chand says,' I'm his fan, we follow him. I like his style. He is the real hero; I'm happy.' pic.twitter.com/cT7QGXntMs
— ANI (@ANI) March 3, 2019
இளைஞர்கள் பலரும் “இப்போது நான் அவரின் ரசிகர். அதனால் தான் அவரின் மீசையையே நானும் வைத்திருக்கிறேன்” என்று கூறி வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.