பெற்ற மகளிடம் கோபத்தை வெளிப்படுத்தினாரா அபிஷேக்? ஏர்போர்டில் நடந்தது என்ன?

இப்படி பொது இடத்தில் அபிஷேக் நடந்துக் கொண்டது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

By: Updated: July 24, 2018, 02:15:21 PM

பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் மும்பை விமான நிலையத்தில் ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதனாவிடம் நடந்துக் கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

பாலிவுட் சினிமாவில் அனைவரையும் அன்னாந்து பார்க்க வைக்கும் ஜோடி ஐஸ்வர்யா ராய்- அபிஷேக் பச்சன். இவர்களின் செல்ல மகள் ஆராதனா தனது தாயான ஐஸ்வர்யாவிடம் அதிகம் நெருக்கமாக இருப்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. விழாக்கள், விருது மேடைகள், கோயில் என எங்கு சென்றாலும் ஐஸ்வர்யா மகள் ஆராதனாவை பத்திரமாக பார்த்துக் கொள்வார்.

இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் தனது செல்ல மகளான ஆராதனாவிடம் அபிஷேக் பச்சன் கோபத்தை வெளிகாட்டிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில் வெளியே வரும் அபிஷேக் பச்சன் மகள் ஆராதனா கையை பிடிக்கிறார். ஆனால் ஆரதானா அவரின் கையை தட்டி விட்டு ஐஸ்வர்யாவின் கையை பிடித்துக் கொள்கிறார்.

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

இதனால் கோபமடைந்த அபிஷேக் , ஐஸ்வர்யாவையும், ஆராதனாவையும் மொறைக்கிறார். ஆரதானா பயத்தில் தயான ஐஸ்வர்யாவியை இறுக்க பிடித்துக் கொள்கிறார். சமீப காலமாக அபிஷேக் பச்சனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் மனஸ்தாபம் இருப்பதாக ஏகப்பட்ட தகவல்கள் உலா வந்துக் கொண்டிருந்தன. இந்நிலையில் இப்படி பொது இடத்தில் அபிஷேக் நடந்துக் கொண்டது சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

அதே நேரத்தில் இந்த வீடியோ பற்றி அபிஷேக் முற்றிலும் மறுத்து கருத்து தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுக் குறித்து விளக்கமும் அளித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Abhishek bachchan calls out false stories about an alleged fight with aishwarya rai bachchan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X