தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித்தின் ரசிகர்கள் சமீப காலமாக ‘அஜித்தே கடவுளே’ என்று முழக்கமிட்டு வருகின்றனர். எந்த இடம் என்று பார்க்காமல் நினைக்கும் இடத்தில் எல்லாம் அஜித் ரசிகர்கள் ‘அஜித்தே கடவுளே’ என்று கோஷமிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை அணிந்து இருமுடி கட்டிச் சென்ற அஜித் ரசிகர்கள், அங்கே பேனர் கையில் பிடித்துக்கொண்டு, அஜித்தே கடவுளே என்று கோஷமிட்ட்டுள்ளனர். பேனரில் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தின் டீசரை வெளியிட வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது.
கடந்த மாதம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டிலும் ‘அஜித்தே கடவுளே’ என்ற கோஷமிட்டது பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இதற்கு முன்பு, அஜித் நடித்த துணிவு படத்தின் அப்டேட் குறித்து, உள்ளூர் சமானியர்கள் முதல் சர்வதேச ஆளுமைகள் வரை அனைவரிடமும் அஜித் ரசிகர்கள் துணிவு அப்டேட் கேட்டு வந்தனர்.
இந்நிலையில், அஜித் ரசிகர்கள் சபரிமலைக்கு சென்று அஜித்தின் விடாமுயற்சி டீசர் வெளியிட வேண்டும் என்று பேனரைப் பிடித்துக்கொண்டு ‘அஜித்தே கடவுளே’ என்ற கோஷமிட்டுள்ளனர்.
அஜித் ரசிகர்கள் ஐயப்பன் மாலை அணிந்து, சபரிமலையில், அஜித்தே கடவுளே, கடவுளே அஜித்தே, உயிரே அஜித்தே, ரத்தமே அஜித்தே, நாடியே அஜித்தே, கடவுளே அஜித்தே என்று கோஷமிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“