Advertisment

‘கட்டுனா அவள கட்டனும்டா’ பாடலுக்கு மனைவி, மகளுடன் ஆக்ஷன் கிங் மாஸ் டான்ஸ்: வைரல் வீடியோ

நடிகர் அர்ஜுன் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தை முடித்த நிலையில், ‘கட்டுனா அவள கட்டனும்டா’ பாடலுக்கு, மனைவி மற்றும் இளைய மகளுடன் மாஸ் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
arjun dance 1

நடிகர் அர்ஜுன் தனது மனைவி மற்றும் இளைய மகளுடன் ஆடிய மாஸ் டான்ஸ்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

தமிழ் சினிமாவின் ஆக்ஷன் கிங்  என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுன் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவின் திருமணத்தை முடித்த நிலையில், ‘கட்டுனா அவள கட்டனும்டா’ பாடலுக்கு, மனைவி மற்றும் இளைய மகளுடன் மாஸ் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

தமிழ் சினிமாவில் ஹீரோவாகவும் இயக்குனராகவும் வெற்றி பெற்றவர் நடிகர் அர்ஜுன். இவர் நடித்த படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளுக்கு என்று ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். அதனால்தான், நடிகர் அர்ஜுன் ரசிகர்களால் ஆக்ஷன் கிங் என்று கொண்டாடப்பட்டார். 

சினிமாவில் தலைமுறை மாற்றம் நடக்கும்போது, தன்னையும் அதற்கு ஏற்றாற்போல மாற்றிக்கொண்டவர் நடிகர் அர்ஜுன். ஹீரோவாக நடித்து வந்த நடிகர் அர்ஜுன், வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து அதிலும் முத்திரை பதித்து வருகிறார்.  தற்போது, அஜித்தின் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.


இதனிடையே, நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதிக்கும் காதல் திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடைபெற்றது. 

நடிகர் அர்ஜுனுக்கு மொத்தம் இரண்டு மகள்கள். அவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யா பட்டத்து யானை படத்தில் அறிமுகமானார். அதற்கு பிறகு சில படங்களில் நடித்த அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால், ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு சென்றார். அங்கே வந்த தம்பி ராமையாவின் மகன் உபாபதி உடன் நட்பு ஏற்பட்டு அது காதலாக மலர்ந்தது. இதையடுத்து, இருவர் வீட்டிலும் காதலைத் தெரிவித்து திருமணத்துக்கு சம்மதமும் பெற்றனர். இருவர் வீட்டிலும் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிவிட்டனர்.

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா, தம்பி ராமையாவின் மகன் உமாபதி இருவரும் காதலித்து வந்த நிலையில், ஜூன் 10-ம் தேதி திருமணம் எளிமையாக நடைபெற்றது. திருமணத்துக்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால், திருமண வரவேற்பு பிரமாண்டமாக நடைபெற்றது. திருமண வரவேற்பு ரஜினிகாந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த அர்ஜுன், தனக்கு உமாபதி மருமகனாக வருவார் என்று கனவில்கூட நினைத்து பார்த்ததில்லை. அவர் மிகச்சிறந்த பையன் என்று பாராட்டினார்.

இதனிடையே, அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா தனது அக்கா ஐஸ்வர்யாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்த நிலையில், நடிகர் அர்ஜுன் தனது மனைவி மற்றும் இளைய மகளுடன் ஆடிய மாஸ் டான்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், நடிகர் அர்ஜுன் தனது மனைவி மற்றும் இளைய மகளுடன், 'கட்டுனா அவள கட்டணும் டா' பாடலுக்கு செம மாஸாக டான்ஸ் ஆடுகிறார். ரசிகர்கள் பலரும் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் மாஸ் டான்ஸைப் பாராட்டி வருகிறார்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

arjun
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment