"ஆம், என் பெயர் நகத்கான் தான், ஆனால், நான் தீவிரவாதி இல்லை": விமர்சனங்களுக்கு குஷ்பு பதிலடி

அரசியல் ஆதாயத்துக்காக உண்மையான பெயரை தான் மறைப்பதாக சமூக வலைத்தளங்களில் கேலி செய்வோருக்கு, நடிகை குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் தக்க பதிலடி அளித்துள்ளார்.

அரசியல் ஆதாயத்துக்காக உண்மையான பெயரை தான் மறைப்பதாக சமூக வலைத்தளங்களில் கேலி செய்வோருக்கு, நடிகை குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் தக்க பதிலடி அளித்துள்ளார்.

மஹராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்த குஷ்புவின் இயற்பெயர் நகத்கான். முஸ்லிம் மதத்தை சேர்ந்த குஷ்பு, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது, குஷ்பு அகில இந்திய காங்கிரஸின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்துவருகிறார்.

இந்நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக நகத் கான் என்ற பெயரையும், தான் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர் என்பதனையும் குஷ்பு மறைத்து வருவதாக, சிலர் சமூக வலைத்தளங்களில் அவரை விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு தன் ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ள குஷ்பு, “சிலர் என்னை பற்றி புதிதாக ஒன்றை கண்டறிந்துள்ளனர். என்னுடைய பெயர் நகத்கான். என்னுடைய பெயர் என் பெற்றோர்களால் சூட்டப்பட்டது. ஆமாம். நான் ஒரு கான். இப்போது அதற்கு என்ன? நீங்கள் 47 ஆண்டுகள் தாமதமாக கண்டறிந்துள்ளீர்கள்.”, என பதிவிட்டுள்ளார்.

மற்றொரு பதிவில், “நான் நகத்கான். ஆனால், நான் தீவிரவாதி அல்ல. இந்தியராக பெருமைப்படுபவள். இந்தியா எனது நாடு”, என குறிப்பிட்டுள்ளார்.

×Close
×Close