New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/10/1-55.jpg)
பிரபாஸ் பிறந்த நாள்
இன்று அவர் தனது வருங்கால மனைவியின் பெயரை அறிவிப்பாரா?
பிரபாஸ் பிறந்த நாள்
நடிகர் பிரபாஸ் இன்று தனது 39 ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவரின் இந்த ஸ்பெஷல் டேவில் தனது காதல் மனைவியின் பெயரை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகுபலி படத்திற்கு பிறகு, பிரபாஸூக்கு தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவானது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அதுவரை தெலுங்கில் மட்டுமே பிரபாஸிற்கு இருந்த ரசிகர் பட்டாளம் தமிழ்நாட்டிலும் மேலூங்கியது. அவரின் அடுத்தப்படமான சகோவிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
பிரபாஸிற்கு பொருத்தமான ஜோடி யாரென்றால் ரசிகர்கள் முதலில் கூறுவது அனுஷ்காவின் பெயரைத்தான்.
தெலுங்கு சினிமாவில் மட்டுமில்லை தமிழ் சினிமாவிலும் இந்த ஜோடியை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர்கள் இருவரையும் திரையில் பார்த்து கொண்டாடாத ரசிகர்கள் ரொம்பவும் கம்மி.
பிரபாஸ் – அனுஷ்கா ஜோடி ஜோடியை பாகுபலி படத்தில் பார்த்த பின்பு இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துக் கொள்ள போவதாக ஏகப்பட்ட வதந்திகள் உலாவர ஆரம்பித்தன. அதற்கு ஏற்றார் போல் இந்த ஜோடிகளும் விருது நிகழ்ச்சிகள் , பொது விழாக்கள் என அனைத்திலும் ஒன்றாக கலந்துக் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இந்த ஜோடியின் திருமணம் குறித்த செய்தி உலா வந்துக் கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றிக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடிகர் பிரபாஸி உறவினர் ஒருவர், பிரபாஸ் பிறந்த நாள் அன்று அவர் காதல் மனைவியின் பெயர் வெளியாகும் என்றும் , அந்த பெயரை பிரபாஸே கூறுவார் என்றும் தெரிவித்திருந்தார்.
அந்த செய்தியைக் கேட்டு உற்சாகம் அடைந்த பிரபாஸின் உறவினர்கள், அவரின் பிறந்த நாளுக்காக காத்திருந்தனர். இதோ இன்று பிரபாஸின் பிறந்த நாள். இன்று அவர் தனது வருங்கால மனைவியின் பெயரை அறிவிப்பாரா?என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.