Advertisment

சந்திரயான் 3 பற்றி நான் வெளியிட்ட கார்ட்டூன் ஒரு ஜோக் மட்டுமே: நெட்டிசன்களுக்கு பிரகாஷ்ராஜ் பதில்

வெறுப்பு வெறுப்பை மட்டுமே பார்க்கிறது. ஜோக் புரியவில்லை என்றால் அது உங்கள் பிரச்சனை- பிரகாஷ்ராஜ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Prakash Raj

பிரகாஷ் ராஜ்

நிலவில் டீ போடுவது போல் ஒரு கார்ட்டூன் பதிவை நடிகர் பிரகாஷ்ராஜ் 'X' தளத்தில் வெளியிட்ட நிலையில் அது நெட்டிசன்களிடையே கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது. இந்நிலையில் பிரகாஷ்ராஜ் அதற்கு பதில் அளித்துள்ளார்.

Advertisment

இந்தியாவின் சந்திரயான் 3 விண்கலம் நாளை (ஆகஸ்ட் 23) நிலவில் தரையிறங்க உள்ளது. இதுவரை எந்த நாடும் செல்லாத நிலவின் தென்துருவத்தில் தரையிறங்க உள்ளது. வெற்றிகரமாக விக்ரம் லேண்டர் தரையிரங்கினால் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்த சாதனையை எட்டிய 4-வது நாடாக இந்தியா இருக்கும். இந்தியாவின் திட்டத்தை உலக நாடுகளும் உற்று நோக்கி வருகின்றன.

இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்ட X பதிவு சலசலப்பு ஏற்படுத்தியுள்ளது. ‘முக்கியச் செய்தி: வாவ்… விக்ரம் லேண்டர் மூலம் நிலவில் இருந்து வரும் முதல் படம்’ என பதிவிட்டு, நிலவில் ஒருவர் டீ போடுவது போல் கார்ட்டூன் படம் இடம்பெற்றிருந்தது.

இது நெட்டிசன்களிடையே விமர்சனங்களைப் பெற்று வருகிறது. X பயனர் ஒருவர், "சந்திரயான் இந்தியாவின் திட்டம். பல கோடி இந்தியர்கள் திட்டம் வெற்றிபெற வேண்டும் என வாழ்த்துகிறார்கள். நீங்களும் தான். ஆனால் கட்சி வேறு, தேசம் வேறு என்ற வித்தியாசத்தை மறந்து விட்டீர்களா? திருத்திக் கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.

மற்றொருவர், "ஒட்டுமொத்த உலகத்தின் பார்வையும் இந்தியாவின் மீது இருக்கும் போது இது ஒரு மோசமான நகைச்சுவை " என்று பதிவிட்டுள்ளார். மேலும், "நமது விண்வெளித் திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாயின் பெயரிடப்பட்ட விக்ரம் லேண்டர் கொண்டு நம் இஸ்ரோ விஞ்ஞானிகளால் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சந்திரயான்-3 ன் பின்னுள்ள கடின உழைப்பைக் கேலி செய்யும் அளவுக்கு மோடி மீதான வெறுப்பில் நீங்கள் கண்மூடித்தனமாக இருக்கிறீர்களா?” என்றுள்ளார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் விதமாக பிரகாஷ்ராஜ் வெளியிட்ட மற்றொரு பதிவில், "வெறுப்பு வெறுப்பை மட்டுமே பார்க்கிறது. நான் என் பதிவின் மூலம் ஆம்ஸ்ட்ராங் காலத்து நகைச்சுவையை குறிப்பிடுகிறேன். அதன்படி என் பதிவில் நான் நமது கேரளா சாய்வாலாவை (தேநீர் கடைக்காரர்களை) கொண்டாடுகிறேன். உங்களுக்கு ஜோக் புரியவில்லை என்றால் அது உங்கள் பிரச்னை. வளருங்கள்” என்றுள்ளார்.

மேலும், 'உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும், அங்கு ஒரு மலையாளி டீக்கடை வைத்திருப்பார்' என்னும் காமெடியை நினைவுபடுத்தும் விதமாகத் தான் இந்த பதிவு வெளியிடப்பட்டது என்று கூறுகிறார்.

Prakash Raj
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment