New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/cats-5.jpg)
யோஹனியின் மனிகே மாகே ஹிதே பாடலுக்கு பிரித்விராஜ் கஹோன் வாசிக்கும் இந்த வீடியோவை கிட்டத்தட்ட 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
Actor Prithviraj plays cajon for Manike Mage Hithe : இலங்கை மொழிப்பாடலான மனிகே மாகே ஹிதே சமீபத்தில் உலகம் முழுவதும் ஹிட் அடித்த சூப்பர் பாடல். இன்ஸ்டகிராம், டிக்டாக் என்று பார்க்கும் சமூக வலைதளங்களில் எல்லாம் ஒலிக்கும் ஒரே பாடலாக இந்த பாடல் இருந்து வருகிறது. இந்த பாடலுக்கு பலரும் நடனமாடி உயிர்கொடுக்க, நடிகர் பிரித்விராஜ் இந்த பாடலுக்கு கஹோன் இசைத்து வேற லெவல் செய்திருக்கிறார்.
இலங்கையைச் சேர்ந்த பாடகி யோஹனியின் மனிகே மாகே ஹிதே பாடலுக்கு பிரித்விராஜ் கஹோன் வாசிக்கும் இந்த வீடியோவை கிட்டத்தட்ட 15 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
சிறப்பான உணவுடன், ஜே.டியின் இசை இரவில் என்ற கேப்சனுடன் இந்த வீடியோவை அவர் வெளியிட்டுள்ளார். நடிகர்கள் டொவினோ தாமஸ், சித்தார்த் உள்ளிட்டோர் இந்த வீடியோவுக்கு தங்களின் கமெண்ட்டுகளை பதிவு செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.