Advertisment

பறை இசைக்கு குத்தாட்டம் போட்ட சத்யராஜ்- பேரறிவாளன்: வைரல் வீடியோ

பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், தந்தை குயில்தாசனுக்கு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், பறையிசைக்கு நடிகர் சத்யராஜ் மற்றும் பேரறிவாளன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
sathyaraj perarivalan dance, sathyaraj, perarivalan arputham, viral video

பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், தந்தை குயில்தாசனுக்கு பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில், பறையிசைக்கு நடிகர் சத்யராஜ் மற்றும் பேரறிவாளன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், 31 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

பேரறிவாளனின் விடுதலைக்காக அவருடைய தாயார் அற்புதம்மாள் 31 ஆண்டுகளாகப் போராடி வெற்றி பெற்றிருக்கிறார். பேரறிவாளனின் விடுதலையால் அவருடைய குடும்பத்தினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். பேரறிவாளனின் விடுதலைக்காக போராடிய, குரல் கொடுத்த அனைவருக்கும் அற்புதம்மாளும் பேரறிவாளனும் நன்றி தெரிவித்தனர்.

தற்போது பேரறிவாளன் ஜோலார்பேட்டையில் தன்னுடைய அப்பா அம்மாவுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் பேரறிவாளன் தன்னுடைய அப்பா அம்மாவிற்கு பிறந்த நாள் கொண்டாடி இருக்கிறார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பார்த்தசாரதி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பேரறிவாளன் தன்னுடைய தாய் மற்றும் தந்தை குயில்தாசன் 80, அற்புதம் 75 என்ற தலைப்பில் இருவருக்கும் ஒரே நாளில் பிறந்த நாள் விழா கொண்டாடினார்.

இந்த விழாவில், தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு, நடிகர் சத்யராஜ் மற்றும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் மற்றும் அவருடைய தாயார் அற்புதம்மாள் இடம் ஆசிபெற்றனர். மேடையில் கேக் வெட்டி கொண்டாடிய பின்னர் இதில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்கள் குயில்தாசன் 80, அற்புதம்மாள் 75 என்ற தலைப்பில் புத்தகத்தையும் வெளியிட்டனர்.

பேரறிவாளனி தந்தை குயில்தாசன் மற்றும் அற்புதம்மாள் இருவரின் பிறந்தநாள் விழாவை மேலும் சிறப்பிக்கும் வகையில், திருவண்ணாமலை பாப்பம்பாடி ஜமா பெரிய மேளம் பறை இசை நிகழ்ச்சி நடைபெற்றது. பாம்பம்பாடி ஜமா பறை இசை ஆடாதவர்களையும் ஆட வைக்கும் என்பது அனைவரும் அறிந்தது.

பேரறிவாளனின் தந்தை குயில்தாசன் மற்றும் தாய் அற்புதம்மாள் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தில் பாப்பம்பாடி ஜமா பறையிசைக்கு மேடையில் நடிகர் சத்யராஜ் மற்றும் பேரறிவாளன் இருவரும் இணைந்து குத்தாட்டம் போட்டுள்ளனர். சத்யராஜ் - பேரறிவாளன் மேடையில் குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். சிலர் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Viral Video Perarivalan Sathyaraj Arputhammal
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment