New Update
/tamil-ie/media/media_files/uploads/2018/11/h10-16.jpg)
இயக்குனர் நெல்சன்
நெல்சனுக்கு, சிம்பு ஆழ்ந்த இரங்கலை கூறி அவரை தேற்றினார்
இயக்குனர் நெல்சன்
கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார், தந்தை காலமானர். அவரின் உடலுக்கு நடிகர் சிம்பு முதல் ஆளாக போய் இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார்.
சமீபத்தில் வெளியான கோலமாவு கோகிலா படத்தை இயக்கியவர் இயக்குனர் நெல்சன் திலீப் குமார். படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் முதலில் கேட்ட கேள்வி யாருப்பா இந்த இயக்குனர்? என்பது தான்.
படத்தில் இடம்பெற்ற ஒவ்வொரு நகைச்சுவையையும் ரசிகர்கள் கைத்தட்டி ரசித்தனர். பலரும் நெல்சனுக்கு இது முதல் படம் என்றே நினைத்தனர். ஆனால் உண்மையில் நெல்சன் நடிகர் சிம்புவை வைத்து வேட்டை மன்னன் படத்தை துவக்கினார். ஆனால் அந்த படம் பாதியில் நிற்கவே புதுப்படம் எதுவும் துவங்காமல் இருந்தார்.
இந்நிலையில் தான் நடிகை நயன்தாராவுடன் கோலமாவு கோகிலா படம் ஓகே ஆனது. படமும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இந்நிலையில், நேற்று இரவு, நெல்சனின் தந்தை சென்னையில் காலமானர்.
இந்த செய்தி நேற்று இரவு சிம்புவுக்கு தெரிய வந்துள்ளது. உடனே சிம்பு தனது நண்பருடன் நெல்சன் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். அங்கு சென்று முதல் ஆளாக நெல்சனின் தந்தைக்கு மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.
#STR Anna
paid his last respects to Director Nelson ‘s father late yesterday in Chennai.
????KolamaavuKokila ????VettaiMannan pic.twitter.com/zkeuTzyTfL
— Simbu prakash (@simbu_prakash) 27 November 2018
சிம்புவை பார்த்து கண்ணீர் வடித்த நெல்சனுக்கு, சிம்பு ஆழ்ந்த இரங்கலை கூறி அவரை தேற்றினார். இந்த புகைப்படத்தை சிம்புவின் ரசிகர்கள் ட்விட்டரில் பகிர்ந்தனர். இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.