அவரே உடைப்பாராம்.. அவரே புதுசும் வாங்கி கொடுப்பாராம்..சிவக்குமாரை விடாத சர்ச்சை!

தனது சொந்த செலவில் ரூபாய் 21000 மதிப்புள்ள செல்போன் வாங்கி கொடுத்ததற்கான வீடியோ

By: Updated: November 2, 2018, 04:42:44 PM

சில தினங்களுக்கு முன்பு ஆசை ஆசையாக செல்பி எடுக்க வந்த இளைஞரின் செல்போனை தட்டி விட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளான நடிகர் சிவக்குமார், இன்று அதே இளைஞருக்கு புது செல்போனை பரிசாக வழங்கி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

சிவக்குமார் சர்ச்சை:

சினிமா பிரபலங்கள் பொது இடங்களில் அத்துமீறி நடந்து கொள்ளும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.  நாம் திரையில் கண்டு கொண்டாடும் நட்சத்திரங்களை நேரில் பார்க்கும் போது  பிரமிப்பில்  செல்பி எடுப்பது,  சந்தோஷத்தில் கத்துவது  போன்ற செயல்கள் நாகரீகமா? அநாகரீகமா? என்ற விவாதங்கள் நீண்ட காலமாக இருந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் நடிகர் சிவக்குமார் இரண்டு தினங்களுக்கு முன்பு  தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டார்.

அப்போது அங்கிருந்த பார்வையாளர்களில் ஒருவர், சிவக்குமாருடன் செல்பி எடுக்க முயன்றார். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சிவக்குமார் இளைஞரின் செல்போனை கோபத்துடன் தட்டி விட்டார்.  சிவக்குமாரின் இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுக்குறித்த விவாதங்களும் சமூகவலைத்தளங்களில் அதிகமாகின.  இந்நிலையில்  இந்த நிகழ்வில் சம்மந்தப்பட்டிருந்த இளைஞர்  தனது 19,000 ரூ மதிப்புள்ள செல்போன் உடைந்து விட்டதாக மிகவும் கவலையுடன் தெரிவித்திருந்தார்.

அதே நேரத்தில்,  நடிகர் சிவக்குமாரும் இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து வீடியோ வெளியிட்டிருந்தார். ”பொதுமக்களும் பிரபலங்களின் அனுமதியின்றி அவர்களைத் தொடுதல், செல்ஃபி எடுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும். ஏனென்றால் பிரபலங்கள் அனைவரும் நாம் திரையில் பார்ப்பது போல எந்நேரமும் இருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்க முடியாது.” என்றும் அவர் அந்த வீடியோவில் விளக்கம்  கொடுத்திருந்தார்.

இந்நிலையில்,  செல்போனை இழந்த இளைஞருக்கு  சிவக்குமார் சார்ப்பில் புதிய செல்போன் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. இளைஞருக்கு தனது சொந்த செலவில் ரூபாய் 21,000 மதிப்புள்ள செல்போன் வாங்கி கொடுத்ததற்கான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

சிவக்குமார் செல்போனை தட்டி விட்ட வீடியோ வெளியான கொஞ்ச நேரத்திலெயே இணையத்தில் மீம்ஸ்கள் பரவி வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Viral News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Actor sivakumar gifted a brand new mobile to madurai youth

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X