சிங்கத்திற்கு பிறந்ததும் சிங்கமே... கிரிக்கெட்டில் கலக்கும் சூர்யாவின் செல்லமகள்!

கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கைகளில் கோப்பையை வாங்கியுள்ளார்

நடிகர் சூர்யாவின் செல்ல மகள் தியா கிரிக்கெட் விளையாடு வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சூர்யா மகள் வைரல் வீடியோ:

தமிழ் சினிமாவில் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்படும் ஒரு குடும்பம் நடிகர் சிவக்குமாரின் குடும்பம். சிவக்குமாரின் இரு மகன்களான நடிகர் சூர்யா – கார்த்தி இருவருமே கோலிவுட்டில் நம்பர் 1 ஹிரோ லிஸ்டில் இருப்பவர்கள்.

நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நடிகை ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்தார். நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து ஜோதிகா நடித்து வருகிறார்.

இவர்கள் இருவருக்கும் தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். பள்ளியில் படித்து வரும் தியா, டென்னிஸ் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் உடையவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் தற்போது தியாவின் பார்வை கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளது.

ஏற்கெனவே மாநில அளவிலான ஜூனியர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்ற தியா, இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் கைகளில் கோப்பையை வாங்கியுள்ளார்.இந்நிலையில் தற்போது கிரிக்கெட் பயிற்சியாளர் ஒருவரிடம் பயிற்சி எடுக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த சூர்யாவின் ரசிகர்கள் பலரும் தியாவை பாராட்டி வருகின்றனர்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close