திருமண விழாவில் நடிகர் விஜய்..தளபதியை பார்க்க வந்த ரசிகர் கூட்டத்தால் ஸ்தம்பித்த புதுச்சேரி!

நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வழியெங்கும் கட் அவுட், பேனர், வெடி என அசத்தி இருந்தனர். 

நடிகர் விஜய் கலந்துக் கொண்ட திருமண விழாவில், அவரைக் காண ரசிகர்கள் கூட்டம் திரண்டு வந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்யை பார்க்க திரண்ட ரசிகர்கள்:

விஜய் இந்த பெயருக்கு இருக்கும்ன் மவுசு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்வது அனைவருக்கும் தெரிந்தது. மெர்சல் திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய் நாடு போற்றும் நடிகராக மாற்றி புதிய புதிய சாதனைகளை செய்து வருகிறார். சமீப காலமாக விருது விழாக்கள், மேடைகள், இசை வெளியீடு என எங்கு சென்றாலும் இவரின் பேச்சு அனைவராலும் உற்று நோக்கப்பட்டு வருகிறது.

இதற்கு பின்னால் இருக்கும் காரணங்கள் பலரும் அறிந்த ஒன்று.இந்நிலையில்  விஜய் புதுச்சேரியில் நடைப்பெற்ற திருமண விழாவில் கலந்துக் கொண்டார். நடிகர் விஜய் ரசிகர் மன்றத்தின் அகில இந்தியத் தலைவர், ஆனந்து. புதுச்சேரியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான இவரது மகள் திருமண வரவேற்பு விழா, புதுச்சேரி சங்கமித்திரா மகாலில் நேற்று மாலை நடைப்பெற்றது.

இந்த விழாவில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவுடன் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார். இவர்கள் கலந்துக் கொள்ளும் தகவல் சமூகவலைத்தளங்கள் மூலமாக முன்பே புதுச்சேரியில் உள்ள விஜய் ரசிகர்களுக்கு தெரிந்து விட்டது. எனவே அவரைக் காண தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல மாநிலங்களிலிருந்தும் ரசிகர் மன்ற நிர்வாகிகளும் ரசிகர்களும் ஆயிரக்கணக்கில் திரண்டதால், திருமண மண்டபம் நிரம்பிவழிந்தது. மேலும், கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

நடிகர் விஜய் – சங்கீதா மேடைக்கு வந்து மணமக்களை வாழ்த்திய போது அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் ஆர்பரிக்க தொடங்கினர். விசில் சத்தங்களும், கைத்தட்டல்கள் விண்ணை  முட்டின. ரசிகர்களை பார்த்து தளப்தி கைசதைத்தார்.

இந்நிலையில் கூட்டம் நெரிசல் அதிகமானதால் நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய போலீஸார், விஜய் மற்றும் அவரது மனைவியை மண்டபத்திலிருந்து பாதுகாப்புடன் வெளியேற்ற முயன்றனர். அப்போது, நெரிசலில் விஜய்யும், அவரது மனைவியும் சிக்கிக்கொண்டனர்.

இருந்த போது விஜய் மற்றும் சங்கீதாவை காவல் துறையினர் பத்திரமாக  காரில் ஏற்றில் வழி அனுப்பி வைத்தனர். இதனால் புதுச்சேரி முழுவதும் கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.   நடிகர் விஜய்யின் ரசிகர்கள் வழியெங்கும் கட் அவுட், பேனர், வெடி என அசத்தி இருந்தனர்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Viral news in Tamil.

×Close
×Close