விஜய் மற்றும் அஜித் இருவரும் நண்பர்களாக இருந்தாலும், அவர்களது ரசிகர்கள் ஒற்றுமையாக இருப்பதில்லை. எப்பொழுது விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு சமூக வலைதளங்களில் மோதல் போக்கு இருந்துக் கொண்டே வருகிறது.
இந்த நிலையில், வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய வழக்கில் நடிகர் விஜய்க்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபதாரம் விதித்துள்ளது.
நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் என்ற காரை இறக்குமதி செய்தார். இந்த சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தாததால், வரி செலுத்த நடிகர் விஜய்க்கு வணிக வரித்துறை உதவி ஆணையர் உத்தரவிட்டார்.
ஆனால் நடிகர் விஜய் இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், நடிகர் ரியல் ஹீரோவாக இருக்க வேண்டும், ரீல் ஹீரோவாக இருக்க கூடாது, என விஜய்யை வரி கட்ட அறிவுறுத்தியதுடன், ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது.
அவ்வளவு தான் சமூக வலைதளம் பரப்பரப்பாகி விட்டது. ஒரு பக்கம் விஜய்யை விரும்பாதவர்கள் வரி கட்டுங்க விஜய் என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி மீம்ஸ் போட, அந்த பக்கம் விஜய் ரசிகர்கள் கடனை அடைங்க அஜித் என்ற ஹேஷ்டாக்கை உருவாக்கி விட்டனர். இரண்டு ஹேஷ்டாக்குகளும் ட்விட்டரில் இன்று ட்ரெண்டிங்கில் இருந்தது. அவற்றில் சில மீம்ஸ்கள் உங்கள் பார்வைக்கு…
#வரிகட்டுங்க_விஜய் #கடனைஅடைங்க_அஜித்
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil