குழந்தையோடு குழந்தையாக மாறிய சர்கார் தளபதி... க்யூட் வீடியோ

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
actor vijay viral video, நடிகர் விஜய் வைரல் வீடியோ

actor vijay viral video, நடிகர் விஜய் வைரல் வீடியோ

சர்கார் படத்தின் கதாநாயகன் நடிகர் விஜய் மடியில் ஒரு குழந்தையை வைத்துக் கொண்டு கொஞ்சி விளையாடும் வீடியோ வைரலாகியுள்ளது.

Advertisment

ஏ. ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் படம் சர்கார். இப்படம் அடுத்த மாதம் தீபாவளி ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சர்கார் குறித்து வெளிவரும் பதிவுகள் அனைத்துமே உலக அளவில் வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய் குயூட் வீடியோ :

இந்நிலையில் நேற்று இணையத்தில் புதிய வீடியோ ஒன்று வைரலானது. அந்த வீடியோவில், விஜய் தனது மடியில் ஒரு குழந்தையை வைத்து கொஞ்சி விளையாடுகிறார். அந்த குழந்தை அவரிடம் ம்ம்ம்.. என்று பேச, அதற்கு விஜயும் அதே மழலையில் பேசி விளையாடுகிறார்.

Advertisment
Advertisements

இந்த வீடியோ நேற்று இரவில் இருந்து முகநூல், ட்விட்டர், வாட்ஸ் அப் என அனைத்து சமூக வலைத்தளத்திலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ சில நொடிகளே இருந்தாலும், பார்ப்பவர் யாராக இருந்தாலும் திருஷ்டி சுத்தும் அளவிற்கு க்யூட்டாக இருக்கிறது. விஜய்யின் ஃபோட்டோ வெளியானாலே குத்தாட்டம் போடும் ரசிகர்கள் இந்த வீடியோவை ரிபீட் மோடில் வைத்து பார்த்து வருகின்றனர்.

Actor Vijay Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: