நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்றுவருகிறது. படப்பிடிப்பின்போது அங்கிருந்த ரசிகர்கள் எடுத்த வீடியோ வைரல் ஆகியுள்ளது.
நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்றுவருகிறது. படப்பிடிப்பின்போது அங்கிருந்த ரசிகர்கள் எடுத்த வீடியோ வைரல் ஆகியுள்ளது.
actor vijay, vijay Thalapathy 64, விஜய், தளபதி 64, தளபதி 64 படப்பிடிப்பு வீடியோ வரைல், thalapathy 64 shooting video viral, karnataka, shivamoga, vijay fans, thalapathy 64 shooting in shivamoga
நடிகர் விஜய் நடிக்கும் 64வது திரைப்படமான தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு கர்நாடகாவில் நடைபெற்றுவருகிறது. படப்பிடிப்பின்போது அங்கிருந்த ரசிகர்கள் எடுத்த வீடியோ வைரல் ஆகியுள்ளது.
Advertisment
நடிகர் விஜய் நடித்த பிகில் திரைப்படம் வெற்றிப்படமாக அமைந்ததைத் தொடர்ந்து, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்துக்கு ஒப்பந்தமானார். விஜய் நடிக்கும் 64வது படம் என்பதால் இந்தப் படத்துக்கு தற்காலிகமாக தளபதி 64 என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவின் கதையாக எடுக்கப்பட்ட இணையதள தொடருக்கு தடை கோரிக்கை..
Advertisment
Advertisements
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், ரம்யா, ஆண்ட்ரியா, கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
தளபதி 64 படத்தின் படப்பிடிப்பை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் குழுவினர் மும்முரமாக நடத்தி வருகின்றனர். இந்தப் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியர் கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள ஷிவமோகாவில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்புக்காக விஜய் உள்ளிட்ட படக்குழுவினர் முகாமிட்டு படப்பிடிப்பு நடத்திவருகின்றனர்.
ஷிவமோகாவில் சனிக்கிழமை காலை நடிகர் விஜய் இடம்பெறுகிற காட்சி படப்பிடிப்பு நடைபெற்றது. விஜய் படத்தின் படப்பிடிப்பு நடைபெறுவதைக் கேள்விப்பட்ட கர்நாடகா மாநில ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்தைச் சுற்றி திரண்டுவிட்டனர்.
விஜய்யைப் பார்த்த ரசிகர்கள் சந்தோஷத்தில் கத்தி கூச்சலிட்டனர். ரசிகர்களின் ஆரவாரத்தைப் பார்த்த விஜய் அவர்களை நோக்கி கைகளை அசைத்தார். ரசிகர்கள் கூட்டம் அதிக அளவில் திரண்டதால் அங்கே வந்த போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, படப்பிடிப்பின்போது நடிகர் விஜய்யைப் பார்த்த ரசிகர்கள் தங்கள் செல்போனில் வீடியோ பதிவு செய்து டுவிட்டரில் பதிவிட அந்த வீடியோ சமூக ஊடகங்களிலும் இணையத்திலும் வைரல் ஆனது.