Advertisment

மாரடைப்பால் திடீர் மரணம்: கூகுளில் அதிகம் தேடப்படும் நடிகர் விகாஸ் சேத்தி

48 வயதான நடிகர் விகாஸ் சேத்தி பாலிவுட்டில் துணை காதாபாத்திரத்திலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றவர். மேலும், அவர் 2001 ஆம் ஆண்டு வெளியான கபி குஷி கபி கம் திரைப்படத்தில் ராபியாக தோன்றினார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Actor Vikas Sethis death triggers surge in Google searches Tamil News

நடிகர் விகாஸ் சேத்தியின் இறுதி சடங்குகள் இன்றுதிங்கள்கிழமை மும்பையில் நடைபெறும் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

பாலிவுட்டில் பிரபல நடிகராக வலம் வந்த விகாஸ் சேத்தி மாரடைப்பு காரணமாக நாசிக்கில் கடந்த சனிக்கிழமை (செப்டம்பர் 7 ஆம் தேதி) இரவு தூக்கத்தில் காலமானார். 48 வயதான அவர் பாலிவுட்டில் துணை காதாபாத்திரத்திலும் தொலைக்காட்சி சீரியல்களிலும் நடித்து புகழ்பெற்றவர். மேலும், அவர் 2001 ஆம் ஆண்டு வெளியான கபி குஷி கபி கம் திரைப்படத்தில் ராபியாக தோன்றினார். தீபக் திஜோரியின் ஓப்ஸ்! படத்திலும் நடித்தார். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Actor Vikas Sethi’s death triggers surge in Google searches

நாசிக் மாவட்டத்திற்கு குடும்ப நிகழ்விற்காக விகாஸ் சேத்தியும் அவரது மனைவி ஜான்வி சேத்தியும் சென்றுள்ளனர். அப்போது அவருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. ஆனால் விகாஸ் சேத்தி மருத்துவமனைக்கு செல்லவில்லை. பின்னர் தூக்கத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு விகாஸ் சேத்தி மரணமடைந்தார்.

விகாஸ் சேத்தியின் கடைசி தருணங்கள் குறித்து அவரது மனைவி ஜான்வி சேத்தி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், விகாஸ் சேத்தியின் இறுதி சடங்குகள் இன்றுதிங்கள்கிழமை  மும்பையில் நடைபெறும் என்று அவரது மனைவி தெரிவித்துள்ளார். 

48 வயதான நடிகர் விகாஸ் சேத்தி, கியுங்கி சாஸ் பி கபி பஹு தி, கஹியின் தோ ஹோகா மற்றும் சசுரல் சிமர் கா போன்ற டி.வி சீரியல்களில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அவரது திடீர் மரணம் அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

இந்நிலையில், கூகுள் ட்ரெண்ட்சில் (Google Trends) அதிகம் தேடப்படும் நபராக விகாஸ் சேதி உள்ளார். அவர் குறித்து தேடுபவர்கள் எண்ணிக்கை 1000% எழுச்சியைக் கண்டுள்ளது. மேலும், வெறும் 22 மணி நேரத்திற்குள் 200,000 க்கும் மேற்பட்ட தேடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Vikas Sethi

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Viral Viral News Google
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment