/tamil-ie/media/media_files/uploads/2019/04/D3ycogEUIAADTeL.jpg)
Actress Khushbu
Actress Khushbu slapped man : இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்டத் தேர்தல்கள் 18ம் தேதி நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட தேர்தலில் தமிழகம், கர்நாடகாவின் 14 தொகுதிகள் உட்பட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளில் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இன்னும் 7 நாட்களே இருக்கின்ற நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் முக்கிய உறுப்பினராக இருக்கும் நடிகை குஷ்பு, நேற்று கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க சென்றுள்ளார். நேற்று பெங்களூரு மத்திய தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ரிஷ்வான் அசாத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். பிரச்சார மேடையில் இருந்து கீழே வந்து கொண்டிருக்கும் போது, ஒருவர் குஷ்புவை தகாத முறையில் தீண்ட, கோபமுற்ற குஷ்பு அந்த நபரை அங்கேயே அறைந்துள்ளார்.
பிரச்சாரக் கூட்டத்தில் அடிவாங்கிய இளைஞன் - வீடியோ
This is called Kapala Moksha in Kannada. @khushsundar slapped a man who tried to misbehave with her while campaigning for Bengaluru Central Candidate. Even few lady reporters who are subjected to this kind of harassment should learn from Kushboo. #LokSabhaElections2019pic.twitter.com/v5ZuFDTTZa
— Sagay Raj P (@sagayrajp) 10 April 2019
அவரின் வேகமான மற்றும் தைரியமான எதிர்வினையை அனைவரும் பாராட்டி வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பு அதிக அளவில் கேள்விக்குறியாகி வருகின்ற நிலையில், தன்னை தற்காத்துக் கொள்வதன் அவசியம் மற்றும் தைரியத்தை குஷ்பு தன்னுடைய நடவடிக்கைகளில் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.