ஹே பாப்பா... ஹே பாப்பா..! மூத்த நடிகருடன் ‘மாஸ்’ டான்ஸ் ஆடிய குஷ்பு
தென்னிந்திய சினிமா உலகில் 1980களில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த நடிகர் நடிகைகளின் சந்திப்பு நிகழ்ச்சியில், நடிகை குஷ்பு ஒரு முன்னணி நடிகருடன் மாஸ் டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரல் ஆகி உள்ளது.

Actress Kushboo, Kushboo dance with Chiranjeevi, Kushboo mass dance in 80s starred reunion, 1980s cinema stars reunion, 80-கள் நடிர்கள் சந்திப்பு, குஷ்பு மாஸ் டான்ஸ், சிரஞ்சீவியுடன் குஷ்பு மாஸ் டான்ஸ், ஹே பாப்பா ஹே பாப்பா, Kushboo mass dance with chiranjeevi, 1980s south indian cinema stars reunion, south indian cinema stars, Chiranjeevi, Nagarjuna, Kushboo, Mohanlal, Radhika, Suhasini
தென்னிந்திய சினிமா உலகில் 1980களில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த நடிகர் நடிகைகளின் சந்திப்பு நிகழ்ச்சியில், நடிகை குஷ்பு ஒரு முன்னணி நடிகருடன் மாஸ் டான்ஸ் ஆடிய வீடியோ இணையத்திலும் சமூக ஊடகங்களிலும் வைரல் ஆகி உள்ளது.
Advertisment
தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு இப்போது அரசியலில் களம் இறங்கி காங்கிரஸ் கட்சியில் தேசிய செய்தித் தொடர்பாளராக தீவிரமாக செயல்பட்டு வருகிறார். அதோடு, தொலைக்காட்சி நிகழ்சிகளிலும் பங்கேற்று வருகிறார்.
கடலூர் ஆற்றுக்குள் குப்பைக் கொட்டிய 2 அதிகாரிகள்...மக்கள் அதிர்ச்சி! நீர்நிலைகளை மாசுபடுத்துவதால் வரும் தீமைகளை பற்றி அறிய இந்த வீடியோவைப் பாருங்கள்.
அண்மையில், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மூன்று சினிமாக்களிலும் 1980களில் வெற்றிக்கொடி நாட்டிய முன்னணி நடிகர்கள், நடிகைகள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் 80-களில் சினிமாவில் கோலோச்சிய தெலுங்கு நடிகர்கள், சிரஞ்சீவி, நாகர்ஜுனா, மலையாள நடிகர் மோகன்லால், தமிழ் சினிமாவில் நடிகைகள் குஷ்பு, ராதிகா, சுஹாசினி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Advertisment
Advertisements
1980-களில் நடித்த நடிகர்களின் இந்த சந்திப்பில், கலந்துகொண்ட அனைவரும் தங்களுடைய அந்தக் காலத்து மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டு ஆட்டம் பாட்டம் என ஜாலியாக கொண்டாடியுள்ளனர்.
இந்த கொண்டாட்டமான நிகழ்வில் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியுடன் நடிகை குஷ்பு “ஹே பாப்பா... ஹே பாப்பா...” என்ற சிரஞ்சிவியின் மெகா ஹிட்டான பாடலுக்கு ‘மாஸ்’ஆக நடனம் ஆடியுள்ளார். அப்பொது, நடிகை சுஹாசினி நடிகை மகதீராவை அழைத்து வந்து நடனம் ஆட வைத்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வைரல் ஆகி உள்ளது.
மெரினாவில் நுரை தள்ளியதற்கு அரசு அலட்சியம் காரணமா?
முழு நேர அரசியல்வாதியாகிவிட்ட குஷ்பு நீண்ட நாளுக்குப் பிறகு ஒரு மாஸ் டான்ஸ் ஆடியுள்ள இந்த வீடியோவை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து கம்மெண்ட் செய்து வருகின்றனர்.