/tamil-ie/media/media_files/uploads/2020/04/untitled-95.jpg)
actress meena corona virus awareness video, மீனா, வைரல் வீடியோ, meena viral video, corona, coronavirus, கொரோனா வைரஸ், மீனா வேண்டுகோள், actress meena appeal to public, meena video goes viral, lock down india
கொரோனாவைத் தடுக்க ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் மக்கள் வெளியில் சுற்றுவதைப் பார்த்து வருத்தம் தெரிவித்துள்ள நடிகை மீனா, அனைவருக்கும் வீட்டிலேயே இருந்து உலகத்தை காப்பாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால், வீட்டிலேயே இருங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
actress meena corona virus awareness video, மீனா, வைரல் வீடியோ, meena viral video, corona, coronavirus, கொரோனா வைரஸ், மீனா வேண்டுகோள், actress meena appeal to public, meena video goes viral, lock down india
கொரோனாவைத் தடுக்க ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் மக்கள் வெளியில் சுற்றுவதைப் பார்த்து வருத்தம் தெரிவித்துள்ள நடிகை மீனா, அனைவருக்கும் வீட்டிலேயே இருந்து உலகத்தை காப்பாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அதனால், வீட்டிலேயே இருங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை ஆரம்பத்திலேயே தடுக்க வேண்டும் என்று மத்திய அரசு மார்ச் 25 முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து அமலில் உள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு தவிர மற்ற எதற்காகவும் வெளியில் சுற்றக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளது.
ஆனால், பலரும் கொரோனா வைரஸின் தீவிரத்தை அறியாமல், ஊரடங்கு உத்தரவை பொருட்படுத்தால் தேவையில்லாம வெளியில் சுற்றி வருகின்றனர். அவசியமில்லாமல் வெளியே சுற்றுபவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழ் சினிமா உலகில் 90-களில் முன்னணி நடிகையாக விளங்கிய மீனா, அனைவரும் ஊரடங்கு உத்தரவை மதித்து வீட்டிலேயே இருந்து கொரோனா பரவலைத் தடுக்க வேண்டும் என ஒரு விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டுள்ளார்.
. #CoronavirusPandemic இல் நாம் எப்படி வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும் , அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று நடிகை மீனா வேண்டுகோள்#ActressMeena#Covid19Chennai #CoronaInTamilnadu #21daysoflockdown #StayAwareStaySafe ???????????????????????? pic.twitter.com/0TfJHNoePt
— RIAZ K AHMED (@RIAZtheboss) April 5, 2020
மீனா வெளியிட்டுள்ள அந்த வீடியோவில், “ கோவிட் 19 கொரோனா வைரஸ், இந்த உலகையே ஆட்டிப் படைச்சுட்டு இருக்கு. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையா லாக்டவுன் பண்ணினாலும் நிறைய பேர் இதை சீரியசா எடுத்துக்காம, விளையாட்டா வெளிய சுத்திக்கிட்டு இருக்காங்கன்னு கேள்விபடும்போது, டிவியில பார்க்கும்போது ரொம்ப ரொம்ப வருத்தமா இருக்கு. இந்த மாதிரி, அரசு சொல்றதை கேட்காமத்தான் இத்தாலி, ஸ்பெயின் போன்ற நாடுகள்ல நிலைமை ரொம்ப மோசமா போயிருக்கு. தினமும் ஆயிரக்கணக்கானவங்களுக்கு இந்த வைரஸ் பாதிப்பு ஏற்படுத்து. நூற்றுக்கணக்கானவங்கத் தினம் தினம் செத்துப் போறாங்க. அமெரிக்காவுல 2.5 லட்சத்துக்கு மேலானவங்களுக்கு கோவிட் 19 வைரஸ் அட்டாக் ஆகிருக்கு. இந்த நிலைமை நமக்கு வேணுமா? இது வராம இருக்கறதுக்கு நாம, அரசு சொல்றதை கேட்கணும். எவ்வளவு நேரம்தான் வீட்டுலயே டிவி பார்க்கிறது, போரடிக்குதுன்னு சொல்லாதீங்க. வீட்டுல குழந்தைங்க இருந்தாங்கன்னா, அவங்களுக்கு படிப்பு சொல்லிக்கொடுங்க, அவங்களோட விளையாடுங்க. வீட்டு வேலை பாருங்க, கிச்சன்ல ஹெல்ப் பண்ணுங்க. யோகா, மெடிடேசன் இப்படி நிறைய இருக்கு. வீட்டுலயே உட்கார்ந்து, உலகத்தையே காப்பாத்துற ஓர் அற்புதமான வாய்ப்பு எல்லோருக்கும் அடிக்கடி கிடைக்காது. ஜோக்கை விட்டுட்டு சீரியசா சொல்றேன். நீங்க ஜாக்கிரதையா இருந்தாதான், உங்க குடும்பம் ஜாக்கிரதையா, பாதுகாப்பா, ஆரோக்கியமா இருக்க முடியும். அதனால பொறுப்போட இருங்க. வீட்டுலயே இருங்க...” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊரடங்கு உத்தரவை மதித்து அனைவரும் வீட்டிலேயே இருந்து கொரோனா பரவலைத் தடுக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி நடிகை மீனா வெளியிட்டுள்ள இந்த வீடியோ சமூக ஊடங்களில் வைரலாகி கவனத்தை ஈர்த்து வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.