56 வயது லலித் மோடியுடன் சுஷ்மிதா சென் 'டேட்டிங்': வைரல் போட்டோஸ்

Lalit Modi,Susmita Sen,Former Miss Universe : ஆடிசன்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சுஷ்மிதா சென் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்தார். அதன்பிறகு ரீ- எண்டரி கொடுத்த அவர் ஆர்யா 2 என்ற வெப் தொடரில் நடித்தார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
56 வயது லலித் மோடியுடன் சுஷ்மிதா சென் 'டேட்டிங்': வைரல் போட்டோஸ்

Lalit Modi Sushmita Sen

Lalit Modi dating Former Miss Universe Sushmita Sen : தொழில் அதிபர் லலித்மோடியுடன் நடிகர் சுஷ்மிதா சென் விடுமுறை கொண்டாட்டத்தில் உள்ள புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதன் மூலம் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டனரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Advertisment

கடந்த 1996-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான டஸ்டாக் என்ற படத்தில் சிறிய கேரக்டரில் நடித்து சினிமாவில் அறிமுகமானவர் சுஷ்மிதா சென். தொடர்ந்து 97-ல் வெளியான நாகர்ஜூனாவின் ரட்சகன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.

ரட்சகன் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்த போதிலும், அடுத்து தமிழ் வாய்ப்பு கிடைக்காத நிலையில் அர்ஜூன் நடிப்பில் வெளியாக முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு நடமாடியிருந்தார். தொடர்ந்து ஹிந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்த சுஷ்மிதா சென் கடைசியாக பெங்காலி மொழியில் நிர்பாக் என்ற படத்தில் நடித்திருந்தார்

இந்நிலையில், தற்போது 46-வயதாகும் சுஷ்மிதா சென் 56 வயதான தொழில் அதிபர் லலித் மோடியுடன் டேட்டிங்கில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக லலித் மோடி தனது சமூகவலைதள பக்கத்தில், மாலத்தீவில் நடிகை சுஷ்மிதா சென்னுடன் இருக்கும் படங்களை பகிர்ந்துள்ளார்.

Advertisment
Advertisements

இந்த பதிவில், "உலக சுற்றுப்பயணத்திற்குப் பிறகு லண்டனுக்குத் வந்த பிற எனது சிறந்த தோழி சுஷ்மிதாசென்  இறுதியாக ஒரு புதிய வாழ்க்கை தொடங்கப்பட்டது. நிலவுக்கு மேல் இருப்பது போல் தோன்றுகிறது என்று கூறியுள்ளார். ஆனாலும்,  நாங்கள் இருவரும் டேட்டிங்கில் இருக்கிறோம் என்றும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை என்று விளக்கம் அளித்துள்ள இவர், விரைவில் திருமணமும் நடக்கும் என்று கூறியுள்ளார்.

இதனிடையே ஏற்கனவே ரோஹ்மான் ஷால் என்பவருடன் காதலில் இருந்தாக கூறப்பட்டது. இதில் இறுதியாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சுஷ்மிதா சென் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரோஹ்மான் ஷாலை விட்டு பிரிந்ததாக அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த பதிவில், நாங்கள் நண்பர்களாகத் தொடங்கினோம், நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம் காதல் முடிந்தது என்று கூறியிருந்தார்.

மேலும் பிரிந்த பிறகு, சுஷ்மிதாவும் ரோஹ்மானும் ஒருவருக்கொருவர் நல்ல நண்பர்களாக உள்ளனர். சமீபத்தில் நடிகை ட்விங்கிள் கன்னா தொகுத்து வழங்கிய ஒரு பேச்சு நிகழ்ச்சியில் பங்கேற்ற சுஷ்மிதா சென்,தான் திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்று முடிவெடுத்ததாகவும், மூன்று முறை திருமணம் செய்து கொள்ள நெருங்கி வந்தும் அது கைகூடாமல் போனதாக கூறியுள்ளார்.

தற்போது வரை திருமணம் செய்துகொள்ளாத சுஷ்மிதா சென், ரெனி சென் அலிசா சென் என இரு குழந்தைகளை  தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மறுபுறம், லலித் மோடி நான்கு ஆண்டுகளுக்கு முன்பு புற்றுநோயுடன் போராடி காலமான மினல் மோடியை கடந்த 1991-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

மேலும் ஆடிசன்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட சுஷ்மிதா சென் நடிப்பதில் இருந்து ஒதுங்கியிருந்தார். அதன்பிறகு ரீ- எண்டரி கொடுத்த அவர் ஆர்யா 2 என்ற வெப் தொடரில் நடித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Cinema Update Sushmita Sen

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: