லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தியின் ஃபேமஸ் உதை; வைரல் வீடியோ

1990களில் தமிழ் தெலுங்கு என இரு மொழி சினிமாக்களிலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று ஆக்‌ஷன் படங்களில் கலக்கியவர் நடிகை விஜயசாந்தி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு...

1990களில் தமிழ் தெலுங்கு என இரு மொழி சினிமாக்களிலும் லேடி சூப்பர் ஸ்டார் என்று ஆக்‌ஷன் படங்களில் கலக்கியவர் நடிகை விஜயசாந்தி. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ எண்ட்ரி கொடுத்துள்ள விஜயசாந்தியின் ஆக்‌ஷன் பயிற்சி வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.

நடிகை விஜயசாந்தி தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னம், இந்தி என பல மொழி படங்களில் நடித்துள்ளார். 1990-களில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி படங்களுக்கு இணையாக விஜயசாந்தி நடித்த ஆக்‌ஷன் படங்கள் மக்களிடையே வரவேற்பை பெற்றது. விஜயசாந்தியின் துணிச்சலாக ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் திறமையால், விஜயசாந்தி தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களில் நடித்து வந்தார்.

இவருடைய ஆக்‌ஷன் படம் தெலுங்கு சினிமாவில் மட்டுமில்லாமல், தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ளது. விஜயசாந்தி படங்கள் பல முன்னணி நட்சத்திர ஹீரோக்களின் படங்களுக்கே கடும் போட்டியாக அமைந்தது.

இப்படி, சினிமாவில் தொடர்ந்து ஆக்‌ஷன் நாயகியாக வளம்வந்த விஜயசாந்தி 1998-ம் ஆண்டு அரசியலில் களம் இறங்கினார். அவர் அரசியலில் நுழைந்த பிறகு படிப்படியாக படங்கள் நடிப்பதை குறைத்துக்கொண்டே வந்தார்.

விஜயசாந்தி இதற்கு முன்பு கடைசியாக 2006-ம் ஆண்டு நாயுடம்மா படத்தில் நடித்தார். அதன் பின்னர், அவர் சினிமாவில் நடிக்காமல் இருந்துவந்தார்.

இந்த நிலையில் விஜயசாந்தி நடித்து தெலுங்கில் வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றி பெற்றுள்ள படம் சரிலேறு நீகேவ்வறு திரைப்படம்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரீ எண்ட்ரி கொடுத்துள்ள விஜயசாந்தி மீண்டும் தான் லேடி சூப்பர் ஸ்டார் என்று நிரூபித்துள்ளார்.

லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி தெலுங்கு சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான மகேஷ்பாபுவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு விஜயசாந்திக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜயசாந்திக்கு இவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்றால் இன்னும் அவருடைய ஆக்‌ஷன் மார்க்கெட்டுக்கு மவுசு குறையவில்லை என்றுதானே அர்த்தம்.


லேடி சூப்பர் ஸ்டார் விஜயசாந்தி ஆக்‌ஷன் காட்சிகளை யாரோடும் ஒப்பிடவே முடியாது. விஜயசாந்தி சரிலேறு நீகேவ்வறு ஷூட்டிங் ஸ்பார்ட்டில் தனது பேமஸ் ஆன ஆக்‌ஷன் கிக்கை, அவருடைய அசிஸ்டேண்ட் ஒருவரிடம் செய்துகாட்டி பயிற்சி செய்து காட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரல் ஆகிவருகிறது.

அந்த வீடியோவில், விஜயசாந்தி, ஸ்டைலாக பாண்ட், சர்ட் உடையில் ஸ்டைலாக கூலிங் கிளாஸ் அணிந்துகொண்டு அப்படியே தனது ரைட் காலை தூக்கி ஒரு கிக் விட்டு நிறுத்துகிறார். இந்த வீடியோவைப் பார்க்கும்போது அப்படியே 1990-களில் கலக்கிய ஆக்‌ஷன் விஜயசாந்தி மீண்டும் விஸ்வரூபம் எடுப்பது போல உள்ளது.

இந்த வீடியோவை ரசிகர்கள் பலரும் திரும்ப திரும்ப பார்த்து ரசித்து சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Viral News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close