Advertisment

ரூபாய் மதிப்பு சரியவில்லை… டாலர் மதிப்பு உயர்வு… நிர்மலா சீதாராமனை விமர்சித்த பிரபல நடிகை நகைச்சுவை வீடியோ

நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை விமர்சிக்கும் விதமாக, பிரபல நடிகை வினோதினி நகைச்சுவையாக வெளியிட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
ரூபாய் மதிப்பு சரியவில்லை… டாலர் மதிப்பு உயர்வு… நிர்மலா சீதாராமனை விமர்சித்த பிரபல நடிகை நகைச்சுவை வீடியோ

“டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாக பார்க்கவில்லை. டாலரின் மதிப்பு உயர்வதாகவே பார்க்கிறேன்” என்று கூறிய நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை விமர்சிக்கும் விதமாக, பிரபல நடிகை வினோதினி நகைச்சுவையாக வெளியிட்டுள்ள வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

Advertisment

உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியத்தின் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அங்கே செய்தியாளர்களைச் சந்தித்த அவரிடம், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவது குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன, “நான் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாகப் பார்க்கவில்லை, டாலரின் மதிப்பு உயர்வதாகவே பார்க்கிறேன். அமெரிக்காவின் டாலர் மதிப்பு தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அதனால், அமெரிக்க டாலருக்கு நிகரான மற்ற நாடுகளின் பணத்தின் மதிப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது. நாணய சந்தையில் வளர்ந்து வரும் நாடுகளின் நாணயத்தின் மதிப்பைவிட இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வாகவே இருக்கிறது” என்று கூறினார்.

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் “டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைவதாக பார்க்கவில்லை. டாலரின் மதிப்பு உயர்வதாகவே பார்க்கிறேன்” என்று கூறியதற்கு சமூக ஊடகங்களில் பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். மேலும், நிர்மலா சீதாரமான கூறியதற்கு அவருடைய கருத்தை கிண்டல் செய்து நகைச்சுவையாக விமர்சித்தனர்.

இந்நிலையில் பிரபல நடிகை வினோதினி, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை விமர்சிக்கும் வகையில் நகைச்சுவையாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் வினோதினி நகைச்சுவையாக விமசித்து பேசியிருப்பதாவது: “குறைகளை தைரியமாகச் சொல்லுங்க. குறை சொன்னா உள்ள தூக்கிப் போட நாங்க என்ன ஜனநாயக நாடா… நாங்க ஒரு உணவகம். நீங்க எங்களின் குறைகளை சுட்டிக் காட்டினால்தான் எங்கள் குறைகளை நாங்கள் திருத்திக்க முடியும். என்ன குறை சொல்லுங்க. என்னது…வெங்காய தோசையில் வெங்காயம் கம்மியா இருந்துதா… வெங்காயம் கம்மியா இல்ல தோசை பெருசா இருந்தது. நல்லா யோசித்து பாருங்கள்.

அப்புறம் என்ன குறை. சாம்பார்ல கேரட் தேட வேண்டியிருந்ததா… ஆனா கேரட்ல சாம்பாரை தேட வேண்டியதில்லைல. எல்லாத்தையும் பாசிட்டிவா பாருங்க. அதுதான் எல்லாமே. வேற என்ன குறை. தேங்கா சட்னியில தேங்காய் ஊசி போயிருந்ததா. தேங்காய் அப்படியே தான் இருந்தது. நாள் தான் கடந்து போச்சு. அதுக்கு தேங்கா என்ன பண்ண முடியும். நீங்க எல்லாத்தையும் நெகட்டிவா யோசிக்கிறீங்க. ஒரு படத்துல சொல்லுவாங்கல்ல. ஒரு சின்ன வரி பக்கத்துல பெரிய வரி போட்டு பாருங்க, அப்புறம் அந்த சின்ன கோடு பத்தி நீங்க கவலைப் படமாட்டீங்க. என்னது அது கோடா. கோடோ ரோடோ நாங்க அத வரின்னுதான் சொல்லுவோம்.” என பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை வினோதினி இதற்கு முன்னர், ஜி.எஸ்.டி வரி பற்றி இதேபோல நகைச்சுவையாக விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டிருந்தார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Viral Video Viral News Viral
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment