குட்டி சிறுவனின் அராஜகம்: கழிப்பறையில் இருந்தவரிடம் அட்ரஸ் கேட்ட கொடுமை!!!

அந்த நபர், எந்த நிலையில் இருந்தார் என்பது வீடியோவை பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

அந்த நபர், எந்த நிலையில் இருந்தார் என்பது வீடியோவை பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
குட்டி சிறுவனின் அராஜகம்:  கழிப்பறையில் இருந்தவரிடம்  அட்ரஸ் கேட்ட கொடுமை!!!

4 வயது சிறுவன், ஒருவன்  கழிப்பறையில் செய்த  மகா அராஜகம்  வீடியோக இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  வீடியோவை பார்ப்பவர்கள் சிறுவனை தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள்.

Advertisment

இந்த வீடியோவை பார்பவர்கள் எல்லாருக்கும்,  இந்த காட்சி திரைப்படங்களில் வருவது போல் தோணலாம். ஆனால், நிஜத்தில் தங்களுக்கும் இப்படி நேர்ந்தால் என்ன ஆகும் என்பதை தயுவு செய்து கற்பனை செய்துக் கூட பார்க்க வேண்டாம்.  நேற்று, இரவு,  அமெரிக்காவைச் சேர்ந்த  ட்ரீயூ என்ற இளைஞன், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட இந்த வீடியோ மறு நாள்  காலை விடிவதற்குள் மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

இதுப்போன்ற சம்பவங்கள் தனக்கு நேர்ந்தால், பலரும் அதை மறைக்கத்தான் பார்ப்பார்கள். ஆனால், ட்ரீயூ சிறுவனின் கடமையை பார்த்து வியந்து அதை வீடியோவாக  வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில்,  ஆண்கள் கழிப்பறையில் ஒரு சிறுவன் திடீரென்று,  உள்ளே நுழைகிறான். மூடி இருக்கும் ஒரு கழிப்பறையின்  கதவுக்கு கீழே இருக்கும் பகுதி வழியே உள்ளே  நுழைந்து  கை கழுவும் வாட்ஷ் பேஷன்(Wash basin) எங்கே இருக்கிறது என்று உள்ளே இருப்பவரிடம் கேட்கிறான்.  அப்போது அந்த நபர், எந்த நிலையில் இருந்தார் என்பது வீடியோவை பார்ப்பவர்களுக்கு நன்கு தெரியும்.

Advertisment
Advertisements

அவனுக்கும் அட்ரஸ் சொல்லி விட்டு, அவனை அனுப்ப நினைக்கும் போது,  வந்த வழியே செல்லாமல் கதவை திறந்துக் கொண்டு சிறுவன் செல்ல முயற்சித்தது  பார்ப்பவர்களுக்கு அடக்க முடியாத  சிரிப்பை வரவைத்துள்ளது.  ஆனால், உள்ளே இருந்தவரோ ரொம்ப கூலாக இந்த சம்பவத்தை கடந்துள்ளார்,

இதுக் குறித்து அவர் கூறியிருப்பது, ”கண்டிப்பாக அந்த இடத்தில் எனக்கு கோபம் வரவில்லை. மாறாக சிறுவனின்  கடமையையும், அவனின் குரலும் என்னை ஈர்த்தது, அதனால் தான் நான் இந்த வீடியோவை வெளியிட்டேன்” என்று கூறியுள்ளார். ஒரே நாள் இரவில் அந்த 4 வயது சிறுவன், எல்லோரின் உள்ளம் கவர்ந்த சிறுவனாக மாறியுள்ளான்.

,

மேலும், இந்த வீடியோவைக் கண்ட பலரும், சிறுவனை க்யூட், ஜப்பினு கொஞ்சி  தள்ளுகிறார்கள்.

 

,

Social Media Viral

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: