இந்த நேரத்துக்கு இது நிச்சயம் நமக்கு தேவை; அம்மாவுடன் பாட்டு பாடும் குட்டிச்சுட்டியின் வீடியோ

இந்த வீடியோவில் நம்மை மகிழ்விப்பதும் ஒரு கலைஞர் தான். அளவில் மிகவும் குட்டியாக இருந்தாலும் கூட தன்னுடைய அபார திறமையாலும், அழகான அசைவாலும் நம்மை அசைத்து விடுகிறார்.

Adorable video of a little girl’s song party with mother

Adorable video of a little girl’s song party with mother : கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில் சமூக வலைதளங்களுக்கு சென்றாலே நமக்கு பயம் தொற்றிக் கொள்கிறது. எங்கே யாருக்கு என்ன நடக்கிறதோ என்ற பயம் ஒரு பக்கம், நம் வீட்டில் உள்ளவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அக்கறை மறுபக்கம் இருக்க, கலைஞர்கள் பலர் நம்மை ஆசுவாசப்படுத்துகிறார்கள்.

இந்த வீடியோவில் நம்மை மகிழ்விப்பதும் ஒரு கலைஞர் தான். அளவில் மிகவும் குட்டியாக இருந்தாலும் கூட தன்னுடைய அபார திறமையாலும், அழகான அசைவாலும் நம்மை அசைத்து விடுகிறார்.

2015ம் ஆண்டு வெளியான பாலிவுட் திரைப்படமான தமஷாவிற்கு இசை அமைத்தார் ஏ.ஆர். ரஹ்மான். அந்த படத்தில் அகர் தும் சாத் ஹோ என்ற பாடல் இடம் பெற்றிருந்தது. அந்த பாடலை அம்மாவும் குட்டி மகளும் பாடி வீடியோவாக சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.கேரளாவை சேர்ந்த அஞ்சனா மடத்தில் இந்த பாடல் பாடலை தன்னுடைய மகளுடன் சேர்ந்து பாட, ம்ருதுளா சக்கரவர்த்தி இதனை ட்விட்டரில் பதிவிட இந்த வீடியோ வைரலானது

உகுலேலே வாசித்துக் கொண்டு அவருடைய அம்மா அந்த பாடலைப் பாட, அவருடைய மகள் கையை அசைத்து ஒரு இசை அமைப்பாளர் ரேஞ்சுக்கு பாட்டு பாடிக் கொண்டிருக்கிறார். இந்த வீட்யோ சமூக வலைதளத்தில் வைரல் ஹிட் அடிக்கவும், பலரும் இந்த சூழலுக்கு இந்த பாடல் எவ்வளவு இனிமையாக இருக்கிறது என்று தங்களின் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Viral news here. You can also read all the Viral news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Adorable video of a little girls song party with mother

Next Story
கனடாவிலும் விஜய் ஆர்மி? என்னா குத்து குத்துறாங்க!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express