New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/24/ID7beWKMyDERwW593Yp6.jpg)
யானைகள் மிகவும் புத்திசாலியான விலங்குகள். அவை சிக்கலான பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டவை. அவை வலுவான சமூக பிணைப்புகளைக் கொண்டுள்ளன. Image Source: x/ @ParveenKaswan
யானைகள் மிகவும் புத்திசாலியான விலங்குகள். அவை சிக்கலான பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டவை. அவை வலுவான சமூக பிணைப்புகளைக் கொண்டுள்ளன. Image Source: x/ @ParveenKaswan
காட்டில் நீர் தேங்கிய குட்டையில் தவறி விழுந்த ஒரு பெரிய யானையும், அதன் குட்டி யானையும் எப்படி போராடி கரையேறியது, குட்டி யானையை மீட்க தாய் யானை துரிதமாக செயல்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யானைகள் மிகவும் புத்திசாலியான விலங்குகள். அவை சிக்கலான பிரச்சனைகளை தீர்க்கும் திறன் கொண்டவை. அவை வலுவான சமூக பிணைப்புகளைக் கொண்டுள்ளன மற்றும் நீண்ட கால நினைவுகளைக் கொண்டுள்ளன. யானைகள் நெருக்கமான குடும்பக் குழுக்களாக வாழ்கின்றன.
பெண் யானைகள் தங்கள் குட்டிகளைப் பராமரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
யானைகள் வெவ்வேறு ஒலிகள், உடல் மொழி மற்றும் தொடுதல் மூலம் தொடர்பு கொள்கின்றன. அவை பூகம்பம் போன்ற அதிர்வுகளை தூரத்திலிருந்து உணரக்கூடியவை. யானைகள் காடுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. அவை விதைகள் பரவவும், தாவரங்கள் வளரவும் உதவுகின்றன.
யானைகளின் துதிக்கை மிக விஷேசமானது. யானையின் துதிக்கை மொத்தம் 40,000 தசைகளால் ஆனது. யானைகளுக்கு மிகுந்த ஞாபக சக்தி உள்ளது.
யானைகளுக்கு மனிதர்களைப் போல மூளைப்பகுதியில் உணர்ச்சிப் பகுதி அமைந்துள்ளது. இதனால், கோபம், பாசம், கண்ணீர் எனப் பல விஷயங்களில் யானைகள், மனிதர்களை ஒத்தது. யானைகள் இருக்கும்வரைதான் காடுகள் செழிக்கும். காடுகள் இருக்கும்வரைதான் மழைபொழியும், தண்ணீர் கிடைக்கும். தண்ணீர் இருக்கும் வரைதான் மனிதன் வாழ்வான். யானைகளின்றி மனிதர்களுக்கு வாழ்வில்லை.
The right way to climb has been discovered. This amazing family. pic.twitter.com/meBTigj9Mf
— Parveen Kaswan, IFS (@ParveenKaswan) March 24, 2025
அதனால் சமூக வலைதளங்களில் யானைகளின் வீடியோ நெட்டிசன்களை ஈர்த்து வைரலாகத் தவறியதே இல்லை. அந்த வகையில், காட்டில் நீர் தேங்கிய குட்டையில் தவறி விழுந்த ஒரு பெரிய யானையும், அதன் குட்டி யானையும் எப்படி போராடி கரையேறியது, குட்டி யானையை மீட்க தாய் யானை துரிதமாக செயல்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை ஐ.எஃப்.எஸ் அதிகாரி பர்வீன் கஸ்வான் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில் காட்டில் யானைக் கூட்டம் ஒன்று, நீர் தேங்கியுள்ள குட்டை அருகே சென்றபோது, ஒரு குட்டி யானையும், ஒரு பெரிய யானையும் விழுந்துள்ளன. இதைப் பார்த்த தாய் யானை, பதற்றம் அடைந்து துரிதமாக செயல்பட்டு, கால்களால் குட்டையின் கரையை உடைத்து யானைக் குட்டி மேலே ஏறுவதற்கு உதவுகிறது. முழுமையாக மேலே ஏற முடியாமல் திணறிய குட்டி யானையை தாய் யானை தனது தும்பிக்கையால் தூக்கி இழுத்து காப்பாற்றியது.
அதே நேரத்தில், மறு மூலையில் பெரிய யானை குட்டையில் இருந்து மேலே ஏறுவதற்காக போராடியது. எப்படியோ அந்த பெரிய யானை குட்டையில் இருந்து மேலே பாதுகாப்பாக ஏறியது. குட்டி யானையும், பெரிய யானையும் குட்டையில் இருந்து போராடி மேலே ஏறியதைப் பார்த்த நெட்டிசன்கள், தாங்களே மேலே ஏறி மீண்ட உணர்வில் மகிழ்ச்சியை வெளிபடுத்தி வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர்.
இந்த வீடியோவைப் பார்த்த சமூக ஊடகப் பயனர் ஒருவர், “ஆம், இந்த வீடியோவில் என்னை மிகவும் கவர்ந்தது என்னவென்றால், குட்டி யானை ஏற சிரமப்பட்டபோது (அதன் தாய் உதவியிருக்கலாம் என்று நினைக்கிறேன்), வலதுபுறத்தில் இருந்த யானை குட்டிக்கு அருகில் பாலத்தின் கீழே நின்று, தேவைப்பட்டால் உதவ தயாராக இருந்தது. ஆனால், உதவவில்லை. குட்டி யானை வாழ்க்கையின் வழிகளை கற்றுக்கொள்ள அனுமதித்தது. குட்டி யானை பாதுகாப்பாக ஏறியதை பார்த்தவுடன், அதுவும் ஏறியது. இது கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம். அவர்களின் நடத்தையை நான் தவறாக மதிப்பிடுகிறேனா என்று தெரியவில்லை, ஆனால் நான் நினைத்தது இதுதான்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு பயனர், “சிறந்த அறிவுசார் விலங்கு அனேகமாக, யானைகளாகத்தான் இருக்க வேண்டும், அவற்றின் வாழ்க்கையைப் பற்றி இன்னும் பல ஆராய்ச்சிகள் தேவை. யாராவது அதைச் செய்ய முன்வருவார்கள் என்று நம்புகிறேன், மக்களுக்கு ஆர்வம் உள்ளது. ஆனால், இது ஸ்பான்சர்கள்/நிதி பற்றிய கேள்வி மட்டுமே. வனவிலங்கு துறையில் ஆராய்ச்சி வேகம் பெற வேண்டும்.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
மூன்றாவது பயனர், “நான் அடுத்த பிறவியில் யானையாகப் பிறக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.