இந்தியாவுக்கான நார்வே தூதரக அதிகாரி எரிக் சோல்ஹெய்ம் காணொலி ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்து, “இந்தியாவின் வியத்தகு அழகு” என வியந்துள்ளார்.
அதில், சமீபத்தில் இமயமலையின் மிக உயரமான சிவன் கோவிலின் ட்ரோன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். இது 720,000 க்கும் அதிகமான பார்வைகளையும் 50,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் குவித்துள்ளது.
அந்த வீடியோவில், “நம்பமுடியாத இந்தியா! உலகின் மிக உயரத்தில் அமைந்துள்ள மகாதேவ் மந்திர், 5000 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படுகிறது! உத்தரகாண்ட்” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த பதிவு உடனடியாக இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்தது. சில நெட்டிசன்கள் அற்புதமான காட்சியின் அழகைக் கண்டு வியந்தாலும், சிலர் தூதரின் தலைப்பு தவறாக வழிநடத்தும் எனக் கூறியுள்ளனர்.
இதில் ஒரு பயனர், “இந்தக் கோவில் கட்டிடக்கலை சிறப்பாக உள்ளது. இது ஆச்சரியமாக இருக்கிறது, அது பனிச்சரிவுகள் மற்றும் பூகம்பங்களில் கூட தப்பித்தது” எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொருவர், “இது ஒரு அழகான கோவில் ஆனால் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது அல்ல” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், அரசாங்க தளத்தின்படி, உத்தரகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் 3,680 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள துங்கநாத் உலகின் மிக உயரமான சிவன் கோயிலாகும். இக்கோயில் 1,000 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil