வைரல் புகைப்படம்: குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டே தேர்வு எழுதிய பெண்!

ஜஹான் ஓடிப்போய் தனது கைக் குழந்தையை தேர்வுக் கூடத்துக்குள் தூக்கி வந்தார்.

பெண்களுக்கு அதிக கட்டுபாடுகள் விதிக்கப்படும் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய பெண் ஒருவர், தனது குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டே தேர்வு எழுதிய சம்பவம் பலரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

பெண்களின் அர்பனிப்பும் எதுவே நிகராகாது.  தாய்மை உணர்வுடன் கூடிய பெண்கள் எந்த நேரத்திலும் தங்களின் கடமையை சரிவர செய்வார்கள். இதற்கு எடுத்துக்காட்டாக ஆப்கானிஸ்தானில் நடந்துள்ள ஒரு நிகழ்வு அனைத்து தாய்மார்களையும் பெருமடைய செய்துள்ளது.

மற்ற உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆப்கானிஸ்தானில் எப்போதுமே பெண்களுக்கு  அதிக கட்டுபாடுகள் விதிக்கப்படும். இந்த கட்டுபாடுகளை எல்லாம் தகர்த்து எறிந்து விட்டு இஸ்லாமிய பெண் ஒருவர் செய்த செயல் அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.

25 வயதாகும்  ஜஹான் தாப் என்ற இஸ்லாமிய பெண்  தனது கணவரின் உதவியுடன் நில்லி நகரிலுள்ள நாசிர்கோஸ்ரா  என்ற தனியார் கல்வி நிறுவனத்தில் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில்  குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தற்போது தேர்வு நேரம் என்பதால், ஜஹான் தினமும் தனது 2 மாத கைக் குழந்தையுடனே கல்லூரிக்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில், 2 தினங்களுக்கு முன்பு நடைப்பெற்ற தேர்வுக்கு ஜஹான் தனது கணவர் மற்றும் கைக்குழந்தையுடன் தேர்வு எழுத வந்திருந்தார். சேரில் அமர்ந்து அவர் தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது, திடீரென்று அவரின் குழந்தை பசியில் அழுதது.

குழந்தையின் அழுகையைப் பார்த்து துடித்துப் போன, ஜஹான் ஓடிப்போய் தனது கைக் குழந்தையை தேர்வுக் கூடத்துக்குள் தூக்கி வந்தார். பின்பு. தரையில் அமர்ந்து குழந்தைக்கு தாய் பால் ஊட்டினார். அப்படியே தனது தேர்வையும் எழுதி முடித்தார். இதற்கு தேர்வு கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியரும் அனுமதி வழங்கியுள்ளார்.

پیشنهاد خوبی است

Posted by Yahya Erfan on 19 मार्च 2018

ஜஹான் குழந்தைக்கு பாலூட்டியவாறே தேர்வெழுதி புகைப்படம் தற்போது சமூகவலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. இதைப் பார்த்த பலரும் ஜஹாவனுக்கு தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆப்கானிஸ்தான் முழுவதும் இந்த சம்பவம் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது. பல தரப்பில் இருந்தும் ஜஹானுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

×Close
×Close