New Update
/indian-express-tamil/media/media_files/2025/08/11/cat-kumar-2025-08-11-22-04-14.jpg)
பூனைக்கு குடியிருப்புச் சான்றிதழ் கோரி விண்ணப்பம்: பீகாரில் தொடரும் வினோதங்கள்!
பீகாரில் 'நாய் பாபு' என்ற பெயரில் குடியிருப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் அடங்குவதற்குள், தற்போது 'பூனை குமார்' என்ற பெயரில் குடியிருப்புச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் ஒரு விநோதமான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பூனைக்கு குடியிருப்புச் சான்றிதழ் கோரி விண்ணப்பம்: பீகாரில் தொடரும் வினோதங்கள்!
பீகாரில் 'நாய் பாபு' என்ற பெயரில் குடியிருப்புச் சான்றிதழ் வழங்கப்பட்ட விவகாரம் அடங்குவதற்குள், தற்போது 'பூனை குமார்' என்ற பெயரில் குடியிருப்புச் சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இது மீண்டும் ஒரு விநோதமான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரோஹ்தாஸ் மாவட்டத்தில், ஜூலை 29 அன்று, 'பூனை குமார்' என்ற பெயரில் ஆன்லைன் மூலம் குடியிருப்புச் சான்றிதழுக்கு விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில் தந்தையின் பெயர் 'கேட்டி பாஸ்' என்றும், தாயின் பெயர் 'கேட்டியா தேவி' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தில் செல்லுபடியாகும் தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி உள்ளது. மேலும், விண்ணப்பதாரரின் புகைப்படத்திற்குப் பதிலாக உண்மையான பூனையின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.
Rohtas, Bihar | An application has been made for obtaining a residential certificate in the name of a cat. The applicant's name is Cat Kumar, with Catty Boss as the father and Catiya Devi as the mother.
— ANI (@ANI) August 11, 2025
Following the instructions of Rohtas DM Udita Singh, Nasriganj Revenue… pic.twitter.com/wq599ihfLv
இந்த விண்ணப்பம் நஸ்ரிகஞ்ச் பகுதியில் உள்ள அத்திமிகாஞ்ச் கிராமத்தின் முகவரியைக் கொண்டுள்ளது. இந்த விவகாரம் மாவட்ட ஆட்சியர் உதிதா சிங் கவனத்திற்கு வந்ததையடுத்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆக.10 அன்று, அடையாளம் தெரியாத நபர்கள் மீது நஸ்ரிகஞ்ச் காவல் நிலையத்தில் புகார் பதிவு செய்யப்பட்டது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
அதிகாரிகள் தரப்பில், "இந்த விண்ணப்பம் வேண்டுமென்றே அரசு நடைமுறைகளைக் கேலி செய்யவும், அரசு அமைப்புகளின் செயல்பாட்டை சீர்குலைக்கவும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் மற்றும் அவரது பெற்றோரின் பெயர்கள் திட்டமிட்டு புனையப்பட்டவை. பூனையின் புகைப்படத்தைப் பயன்படுத்தி, தவறான தனிப்பட்ட விவரங்களைக் கொடுத்திருப்பது அமைப்பை வேண்டுமென்றே கேலி செய்வதாகும். இது போன்ற ஆன்லைன் தளத்தின் தவறான பயன்பாடு அரசுப் பணிகளின் செயல்திறனைப் பாதிக்கிறது," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சமீபத்தில் பாட்னாவிற்கு அருகே மசௌரி என்ற இடத்தில், நாய்க்கு குடியிருப்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதில் தந்தையின் பெயர் 'குத்தா பாபு' என்றும், தாயின் பெயர் 'குட்டியா தேவி' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரத்தில் மசௌரி வட்ட அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.