Muthaiah Muralitharan Biopic : இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் பந்துவீச்சாளாரான முத்தையா முரளிதரனின் வாழ்வை அடிப்படையாக கொண்டு 800 என்ற படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் முரளிதரனாக நடிக்க இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதி. இந்த படத்தின் படப்பிடிப்பு 2021ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஆரம்பமாகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.
Advertisment
இலங்கை உள்நாட்டுப் போர் சூழலில் வளர்ந்து வரும் கண்டியை சேர்ந்த மலையக தமிழரின் வாழ்வில் கிரிக்கெட் எத்தகைய மாற்றத்தை கொண்டு வருகிறது என்பதை அந்த ஃபர்ஸ்ட் லுக் விவரித்தது. இந்நிலையில், இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷேம் ஆன் விஜய் சேதுபதி (#ShameOnVijaySethupathi) என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இலங்கை யுத்ததை கூர்ந்த கவனித்த அனைவருக்குமே தெளிவாக தெரியும் மலையக தமிழர்களுக்கு இந்த போர் குறித்த தெளிவான அபிப்ராயம் என்ன என்று?
ஒரு தமிழர் ஒரு இலங்கை கிரிக்கெட் வீரரின் வரலாற்று படத்தில் எப்படி நடிக்கலாம் என்றும், தமிழ் தேசிய உணர்வாளர்கள் இது போன்ற படத்தில் ஏன் விஜய்சேதுபதி நடிக்கிறார் என்றும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். ஆனால் இலங்கை உள்நாட்டுப் போர் குறித்து முத்தையாவின் எண்ணங்களும் கருத்துகளும் எவ்வாறு இருந்தது என்பதை இப்படத்தில் குறிப்பிடுவார்களா என்பது ஒருபுறம் இருந்தாலும், ஒரு தமிழர் சர்வதேச கிரிக்கெட் உலகில் ஒரு ஜாம்பவானாக திகழ்ந்திருப்பது நம் அனைவருக்கும் மகிழ்ச்சி தரும் ஒன்று தானே அதற்கு ஏன் இப்படி ஹேஷ்டேக் பரப்பி வருகிறார்கள் என்று மற்றொரு புறம் ஆதரவும் அளித்து வருகிறார்கள்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil