இளைஞர்களின் தற்போதைய ஹாட் சென்சேஷனாக இருக்கும் பிரியா பிரகாஷ் வாரியரின் எக்ஸ்ப்ரேஷன்களுடன், பிரதமர் மோடியை வைத்து வெளிவந்துக் கொண்டிருக்கும் வீடியோ வெர்ஷன்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
‘ஜிமிக்கி கம்மல்’ புகழ் ஷெரிலுக்குப் பிறகு பிரியா பிரகாஷ்தான் இளைஞர்களின் தற்போதைய க்ரஷ். கேரள பாடல்களுக்கும், பெண்களுக்கும் தமிழ் இளைஞர்கள் இடையே மவுசு எப்போதும் குறைவதில்லை. அதற்கான எடுத்துக்காட்டுகள் தான் இந்த ஜிமிக்கி கம்மல் மற்றும் பிரியா பிரகாஷ் வாரியர் ஃபீவர். விரைவில் வெளிவரவிருக்கும் ’ஒரு அடார் லவ்’ மலையாள திரைப்படத்தில் இடம்பெற்றிருக்கும் ’மணிக்ய மலரய பூவி’ பாடலில், பிரியா பிரகாஷ் கண் அசைவுகள் அனைவரது உள்ளத்தையும் கொள்ளையடிக்கும் விதமாக இருந்தது.
இந்த பாடலை விட, அதில் வரும் பிரியா பிரகாஷ் தான் அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளார். இவரின் கண்ணழகில் மயங்கிய இளைஞர்கள் இந்த பாடலை வைத்து, மீம்ஸ், வீடியோ மீம்ஸ், ஜிஃப் என தொடர்ந்து அவர்களின் ஸ்டைலில் கலக்கி வருகின்றன. அத்துடன் நிற்காமல், இவரின் எக்ஸ்ப்ரேஷன்களுடன் பிரதமர் மோடியை வைத்து இளைஞர்கள் வெளியிடும் மீம்ஸ்கள், வீடியோ வெர்ஷன்கள் பட்டி தொட்டி எல்லாம் தீயாக பரவி வருகிறது.
https://twitter.com/chandanmishra15/status/963036557539270656
Childhood video of priya prakash. pic.twitter.com/9bPbLR2AXN
— Mask ???? (@Mr_LoLwa) February 12, 2018
https://twitter.com/priyapvarrier/status/962654259366916096