New Update
/indian-express-tamil/media/media_files/2025/03/08/uiCj9nGBBrNLRmMn2job.jpg)
அண்மையில் பாலிவுட்டில் வெளியான 'சாவா' திரைப்படம் வசூல் ரீதியாக மட்டும் சாதனை படைத்து மக்களை சென்றடையவில்லை. இது வேறு சில தாக்கத்தையும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. திரையரங்குகளில் மராட்டிய முழக்கங்கள் எழுப்பப்பட்டதில் தொடங்கி ஒரு நபர் திரையரங்கிற்கு குதிரையில் வந்தது வரை வித்தியாசமான நிகழ்வுகள் அரங்கேறின. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் அடுத்தகட்டமாக ஒரு விசித்திர நிகழ்வு நடைபெற்றுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: After watching ‘Chhaava’, villagers in MP dig for Mughal-era gold near Asirgarh Fort
புர்ஹான்பூரில், முகலாய காலத்து தங்கம் மண்ணுக்கு அடியில் புதைந்து கிடக்கிறது என்று நம்பி, ஆசிர்கர் கோட்டைக்கு அருகே ஒரு பெரிய கூட்டம் கூடியது. படத்தின் கதைக்களம் மற்றும் பழமையான புராணக்கதைகளால் தூண்டப்பட்ட கிராமவாசிகள், அப்பகுதியில் குழி தோண்டி தங்கத்தை தேடும் பணியில் இறங்கினர். சிலர் இதற்காக மெட்டல் டிடெக்டர்களையும் கொண்டு வந்தனர். இரவு 7 மணி முதல் அதிகாலை சுமார் 3 மணி வரை நடந்த இந்த தேடுதல் வேட்டை, போலீசார் வந்ததும் நிறுத்தப்பட்டது.
இது தொடர்பான வீடியோவை, பத்திரிகையாளர் காஷிஃப் காக்வி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "பாலிவுட் திரைப்படமான சாவாவைப் பார்த்த பிறகு, புர்ஹான்பூரில் (எம்.பி) ஆசிர்கர் கோட்டைக்கு அருகிலுள்ள கிராமவாசிகள் விடியற்காலையில் தங்க வேட்டையைத் தொடங்கினர். ஒளிரும் விளக்குகள் மற்றும் மெட்டல் டிடெக்டர்கள் மூலம், அவர்கள் வயல்களை தோண்டி, முகலாய கால புதையல் பற்றிய வதந்திகளை நம்பி இந்த செயலில் ஈடுபட்டனர். போலீசார் வந்ததும், அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்றனர்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
வைரலான வீடியோ:
After watching bollywood film #Chhava, villagers near Asirgarh Fort in Burhanpur, (MP) launched a gold hunt after the dawn.
— काश/if Kakvi (@KashifKakvi) March 7, 2025
With flashlights & metal detectors, they’ve been digging fields, chasing rumors of Mughal-era treasure !
The gold diggers ran away when Police arrived. pic.twitter.com/LXBsugE1cG
இந்த வீடியோ வைரலாக பரவி சுமார் 2 லட்சம் பார்வைகளைக் கடந்து சென்றது.
முகலாய வரலாற்றோடு ஆழமாகப் பிணைந்துள்ள ஆசிர்கர் கோட்டை, முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் மராட்டியர்களுக்கு எதிரான பிரச்சாரங்களில் இருந்து மறைந்திருக்கும் பொக்கிஷங்கள் பற்றிய வதந்திகள் வரை நீண்ட காலமாக இருந்து வருகிறது. 'சாவா' திரைப்படம், இந்த பழைய கதைகளை மீண்டும் எழுப்பியதாக தெரிகிறது.
லக்ஷ்மன் உடேகர் இயக்கிய இப்படத்தில், சத்ரபதி சிவாஜி மகாராஜின் மகன் சத்ரபதி சாம்பாஜி மகாராஜ் வேடத்தில் விக்கி கவுஷல் நடித்திருந்தார். சிவாஜி சாவந்தின் சின்னமான மராத்தி நாவலான சாவாவை அடிப்படையாகக் கொண்ட, இத்திரைப்படத்தில் மகாராணி யேசுபாயாக ராஷ்மிகா மந்தனாவும், ஔரங்கசீப்பாக அக்ஷயே கண்ணாவும், சர்சேனாபதி ஹம்பிராவ் மோஹிதேவாக அசுதோஷ் ராணாவும், இளவரசர் அக்பராக நீல் பூபாலமும் நடித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.