Agni Natchathiram viral memes in tamil: தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில், இன்று முதல் தொடங்கியுள்ளது. பரணி மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தில் சூரியன் சஞ்சரிக்கக் கூடிய நாட்களுக்கு பெயர்தான், அக்னி நட்சத்திரம். இது வரும் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலகட்டத்தில் வெப்பம் வழக்கத்தைவிட அதிகம் இருக்கும். தமிழகத்தில் ஏற்கெனவே பல மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு 100 டிகிரி ஃபாரன்ஹீட்டைத் தாண்டிய நிலையில், பகலில் வீசும் அனல்காற்றால் பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். வேலூர் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயிலை சமாளிக்க பகல் நேரங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளிவருவதை தவிர்க்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தற்போது இந்த அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் அறிவிப்பை கையில் எடுத்துள்ள நெட்டிசன்கள் விதவிதமான மீம்ஸ்களை பதிவிட்டு வருகின்றனர். இணையவாசிகளால் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த மீம்ஸ்கள் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றன.


















தேர்வு எழுத பள்ளிக்கு வந்தால் மட்டும் போதும் – அமைச்சர் அன்பில் மகேஷ்:
கோடை வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வு எழுத மட்டும் பள்ளிக்கு வரலாம் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தேர்வு இல்லாத நாட்களில் பள்ளிக்கு வர வேண்டாம் என்றும் வெயிலின் தாக்கம் காரணமாக மாணவர்களின் நலன் கருதி இவ்வாறு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த அறிவிப்பு குறித்து நெட்டிசன்கள் மீம்ஸ்களை பதிவிட்டுள்ளனர்.


“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“