New Update
/tamil-ie/media/media_files/uploads/2021/09/bihar-polls.jpeg)
நான் என்னுடைய எருமை மாட்டில் பயணித்து வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். ஏன் என்றால் என்னால் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்க முடியாது
candidate arrives on a buffalo to file nomination : பீகார் மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் வேட்பாளர் ஒருவர் தன்னுடைய வேட்புமனுவை தாக்கல் செய்ய எருமை மாட்டில் வந்ததது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கத்திகார் பகுதியில் இருந்து வேட்புமனு தாக்கல் செய்ய வந்த அஜாத் அமல் எருமை மாட்டில் பயணித்தது வரும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
#WATCH | Bihar Panchayat Polls 2021: Azad Alam, a candidate from Katihar district's Rampur panchayat arrived to file his nomination on a buffalo yesterday pic.twitter.com/CBIF0bbqPl
— ANI (@ANI) September 13, 2021
”நான் கால்நடைகள் வைத்திருப்பவன். நான் என்னுடைய எருமை மாட்டில் பயணித்து வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். ஏன் என்றால் என்னால் பெட்ரோல் மற்றும் டீசலை வாங்க முடியாது என்று வேட்புமனு தாக்கல் செய்த அமல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தங்களின் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். சிலரோ, சுற்றுச்சூழலுக்கு பாதகம் தராத இது போன்ற செயல்களை நாம் ஊக்குவிக்க வேண்டும் என்றும் தங்களின் கருத்துகளை கூறியுள்ளனர். செப்டம்பர் 24 முதல் டிசம்பர் 12ம் தேதி வரையில் 11 கட்டங்களாக பீகாரில் பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.