சுகாதாரம் முதல் கல்வி மற்றும் போக்குவரத்து வரை, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ - AI) பல தொழில்களை மாற்றுகிறது. சமீபத்தில், ஒடிசாவின் சுந்தர்கர் மாவட்டத்தின் ரூர்கேலா வனப் பகுதியில் தண்டவாளத்தை நெருங்கிக் கொண்டிருந்த 3 யானைகள் மீது ரயில் மோத இருந்த அல்லது கடுமையாக காயப்படுத்தக்கூடிய ஒரு பெரிய ரயில் விபத்தை ஏ.ஐ கேமரா தவிர்த்துள்ளது.
ஓய்வுபெற்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரி சுசந்தா நந்தா பதிவின்படி, ரயில் பாதையை நோக்கி யானைகள் நடந்து செல்வதை ஏ.ஐ கேமரா படம்பிடித்து வனத்துறை கட்டுப்பாட்டு அறைக்கு எச்சரித்துள்ளடு, இதைத் தொடர்ந்து, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. இந்த வைரல் வீடியோவில் இரண்டு பெரிய யானைகள் மற்றும் ஒரு குட்டி நடந்து செல்வது பதிவாகி உள்ளது.
“AI கேமரா ரயில் பாதையை நெருங்கும் யானைகளைப் படம்பிடித்து ஜூம் செய்கிறது, ரயிலை நிறுத்துவதற்கான எச்சரிக்கைகளை கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்புகிறது. எங்களிடம் தீர்வுகள் இருந்தன. செயல்படுத்தப்பட்டவை இப்போது பலனைத் தருவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். ரயில் பாதையில் உள்ள இந்த 4 கேமராக்களும் தணிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகும்” என்று சுசந்தா நந்தா எக்ஸ் பக்கத்தில் எழுதியுள்ளார்.
“இதற்கு ஆர்.எஸ்.பி-யால் அதன் குறிப்பிட்ட வனவிலங்கு பாதுகாப்புத் திட்டத்திலிருந்து நிதியளிக்கப்பட்டது, இது ரூர்கேலா வனப் பகுதியில் ஒரு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டது. கியோஞ்சர் & போனாய் வனப் பிரிவுகள் இந்த முயற்சியை மேம்படுத்தும் முயற்சியில் உள்ளன. அனைவருக்கும் வெற்றி, வெற்றி” என்று சுசந்தா நந்தா மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
வீடியோவைப் பாருங்கள்:
AI camera captures & zooms into the elephants approaching the railway line, sending alerts to the control room for stopping the train.
— Susanta Nanda (@susantananda3) December 8, 2024
We had solutions. Happy to see that the ones implemented are now giving results.These 4 cameras along the track was part of mitigation measures. pic.twitter.com/RBNe0hPOnl
இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் விரைவில் 2,29,000 பார்வைகள் மற்றும் பல கருத்துகளைக் குவித்தது. “இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைப் பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கிறது. எதிர்காலத்தில் வேட்டையாடுபவர்களைக் கண்டுபிடிப்பதற்கும் இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். மற்றொரு பயனர் கருத்து, “அற்புதம். இந்த பயனுள்ள தொழில்நுட்பம் இன்னும் நிறைய இடங்களுக்கு விரிவுபடுத்தப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
"தொழில்நுட்பம் ஒரு நல்ல காரணத்திற்காகவும் உயிர்களைக் காப்பாற்றவும் பயன்படுத்தப்படுவதைக் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன்" என்று மூன்றாவது பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
மே மாதம், தமிழ்நாடு வனத் துறை, மதுக்கரையில் இரண்டு ரயில் பாதைகளில் குறைந்தது 12 கண்காணிப்பு கேமரா கோபுரங்களை நிறுவியது, ரயில் விபத்து மரணங்களைத் தடுக்க ஒவ்வொன்றிலும் ஏ.ஐ கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்று பிபிசி செய்தி செய்தி வெளியிட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.