New Update
/indian-express-tamil/media/media_files/2025/01/16/053rLsSoLqyZVS5d1Wk7.jpg)
மகா கும்பமேளா 2025 உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் திங்கள்கிழமை தொடங்கியது. (Image source: @artificialbudhi/Instagram)
மகா கும்பமேளா 2025 உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் திங்கள்கிழமை தொடங்கியது. (Image source: @artificialbudhi/Instagram)
உலகின் மிகப்பெரிய மத மற்றும் ஆன்மீக நிகழ்வான மஹாகும்பமேளா திங்கள்கிழமை தொடங்கியது. கங்கை, யமுனை மற்றும் புராணத்தில் இடம்பெற்றுள்ள சரஸ்வதி நதி சங்கமமான சங்கமத்தில் புனித நீராட வெளிநாட்டினர் உட்பட 40 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சமூக ஊடகங்கள் இந்த நிகழ்வின் வீடியோக்களால் நிரம்பி வரும் நிலையில், எலான் மஸ்க், டொனால்ட் டிரம்ப், லயோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ, வில் ஸ்மித் மற்றும் பலர் போன்ற உலகப் புகழ்பெற்ற முக்கிய பிரபலங்கல் இந்த மகா கும்பமேளா சங்கமத்தில் புனித நீராடுவது போன்ற செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கிய வீடியோ கிட்டத்தட்ட 6 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது.
தற்போது வைரலாகும் AI வீடியோவில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகியோர் புனித நீராடுவதுடன் தொடங்குகிறது. பின்னர், வீடியோவில் எலான் மஸ்க், ஸ்மித், மெஸ்ஸி, ரொனால்டோ, டிரம்ப், ரிஷி சுனக், ஜெண்டயா, டாம் ஹாலண்ட், ஜான் சீனா மற்றும் ஜஸ்டின் ட்ரூடோ ஆகியோர் இந்த புனித நீராடும் சடங்கை நிகழ்த்துவதைக் காட்டுகிறது. "மகா கும்பமேளாவில் பிரயாக்ராஜில் பிரபலங்கள்" என்று வீடியோவின் தலைப்பு கூறுகிறது.
இந்த வீடியோவைப் பாருங்கள்:
இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் மூன்று மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றது. வீடியோவிற்கு பதிலளித்த ஒரு பயனர், “இது ஒரு தலைசிறந்த படைப்பு. மிகவும் அருமையாக செய்யப்பட்டுள்ளது” என்று கருத்து தெரிவித்துள்ளார். மற்றொரு இன்ஸ்டாகிராம் பயனர், “எடிட்டருக்கான ஆஸ்கார் விருது” என்று கருத்து தெரிவித்தார்.
“இது எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியை அளித்தது என்பதை விவரிக்க வார்த்தைகள் இல்லை” என்று மூன்றாவது பயனர் கூறினார்.
இந்த கும்பமேளா 'மோட்சம்' என்பதை விட 'சக்தி'யைப் பற்றியது.
கும்பமேளாவின் முதல் நான்கு நாட்களில் ஆறு கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் சங்கமத்தில் நீராடியுள்ளனர். 45 நாள் திருவிழாவின் முடிவில் இந்த எண்ணிக்கை 40 கோடியைத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வியாழக்கிழமை காலை சங்கம் காட் அருகே வெப்பநிலை 6 டிகிரி செல்சியஸாகக் குறைந்தது. ஆனால், அது பக்தர்களை புனித நீராடுவதைத் தடுக்கவில்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.