சமீப காலமாக ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் (AI) உருவாக்கிய ஓவியங்கள், படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது என்று கூறினால் அது மிகையல்ல. மக்கள் தங்கள் படைப்பாற்றலைக் வெளிப்படுத்த நம்பமுடியாத அளவில் சில காட்சிகளைக் காட்ட ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் படங்களைப் பயன்படுத்துகின்றனர். இப்போது, வயதான பெண்களை தெருக்களில் ஸ்கேட்போர்டிங் செய்வதைக் காட்டும் ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் படத்தை ஒருவர் உருவாக்கியுள்ளார்.
ஆஷிஷ் ஜோஸ், டெக்ஸ்ட் ப்ராம்ட் அடிப்படையிலான ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் திட்டமான மிட்ஜர்னியைப் பயன்படுத்தி ஒரு கலைப்படைப்பை உருவாக்கியுள்ளார்.
இந்தியச் சாலைகளில் மூதாட்டிகள் புடவை போன்ற பாரம்பரிய உடைகளை அணிந்து, ஸ்கேட்போர்டில் வலம் வருவதை “ஸ்கேட்டிங் நானி” படங்கள் காட்டுகிறது. அவருடைய பதிவிற்கு மிட் ஜர்னி / ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் ஜெனரேட்டட் ஆன் மேட் ஆன்” என்று தலைப்பிட்டுள்ளார்.
மூன்று நாட்களுக்கு முன்பு பகிரப்பட்ட இந்த பதிவு 1.17 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. பல நெட்டிசன்களுக்கு இந்த புகைப்படங்கள் யதார்த்தமாகத் தெரிந்ததால் இது உண்மையானதோ என்று நினைத்தனர்.
‘இது மிகவும் நல்லது’ என்று ஒரு பயனர் கருத்து தெரிவித்தார். இந்த படங்கள் ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் ஆல் உருவாக்கப்பட்டவை என்பதை நான் உணர்ந்தபோது, இந்த பதிவின் பாதி உணர்வு போய்விட்டது” என்று மற்றொருவர் வெளிப்படுத்தினார். “இது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது” என்று மற்றொருவர் பகிர்ந்து கொண்டார். “உங்களில் வாழ்க்கையைத் தள்ளிப்போடுபவர்களுக்கு இது மிகவும் அருமையானது. இது நம் அனைவருக்கும் ஒரு பெரிய உந்துதலாக உள்ளது. உங்கள் யாருக்கும் வயதாகவில்லை” என்று மற்றொரு நபர் பதிவிட்டுள்ளார்.
சமீபத்தில், பிஸியான உணவகத்தில் பணிபுரியும் மிகவும் பிரபலமான சில பிரபலங்களைக் காண்பிக்கும் ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் படங்களின் தொடர் வைரலானது. ஆர்ட்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் கலை ஆர்வலர் ஜியொ ஜான் முள்ளூர் உருவாக்கிய, அந்த தொடர் புகைப்படங்கள், கீனு ரீவ்ஸ், போப் பிரான்சிஸ், கிறிஸ்டியானோ ரொனால்டோ, வில் ஸ்மித், டாம் குரூஸ் மற்றும் இன்னும் சில பிரபலங்கள் இரவு நேரங்களில் ஒரு பரபரப்பான தெருவோர திறந்த உணவு சந்தையில் வேலை செய்வதை கற்பனை செய்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“