இன்ஸ்டாகிராமில் தன்னை ‘செயற்கை நுண்ணறிவு ஆர்வலர்’ என்றும் ‘ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் டைம் டிராவலர்’ என்றும் அழைத்துக்கொள்ளும் ஜியோ ஜான் முள்ளூர், பல்வேறு வரலாற்று ஆளுமைகள் செல்ஃபி எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் என்கிற செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் பெரிய அளவில் வளர்ந்து வரும் ஒரு துறையாக உள்ளது. இந்த செயற்கை நுண்ணறிவு பல துறைகளில், பயன்படுத்தப்படுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒருவர் வித்தியாசமாக பயன்படுத்தி மாயாஜாலம் காட்டி பாராட்டுதல்களைப் பெற்றுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்தான் இப்போது உலகத்தின் பேச்சாக மாறியுள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல். ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள், டெல்லியில் பனிப்பொழிவு அல்லது மணமகள் உடையில் இருக்கும் விண்வெளி வீரர்கள் போன்ற சாத்தியமற்ற காட்சிகளை சாத்தியமாக்கியுள்ளது. ஒரு கலை வடிவமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சிறப்பம்சங்கள் பற்றி விமர்சகர்கள் தொடர்ந்து விவாதம் செய்து வருகையில், ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸால் உருவாக்கப்பட்ட படங்கள் தொடர்ந்து வைரலாகி, உடனடியாக விவாதத்திற்கு செல்கின்றன.
இன்ஸ்டாகிராமில் தன்னை ‘செயற்கை நுண்ணறிவு ஆர்வலர்’ மற்றும் ‘ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் டைம் டிராவலர்’ என்று அழைத்துக்கொள்ளும் ஜியோ ஜான் முள்ளூர் என்பவர், மகாத்மா காந்தி, அன்னை தெரசா, ஜூனியர் மார்ட்டின் லூதர் கிங், ஆபிரகாம் லிங்கன், ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் எல்விஸ் பிரெஸ்லி போன்ற வரலாற்று ஆளுமைகள் செல்ஃபி எடுக்கும் படங்களை வெளியிட்டுள்ளார். ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் மென்பொருளான மைண்ட் ஜோர்னி மற்றும் போட்டோஷாப் பயன்படுத்தி தொடர் ஓவியங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அப்படி வெளியிடப்பட்ட புகைப்படங்கள் விளாடிமிர் லெனின், மர்லின் மன்றோ, பாப் மார்லி, ஜவஹர்லால் நேரு, பி.ஆர். அம்பேத்கர் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் அவர்களின் காலகட்டத்தைச் சேர்ந்த பிற நபர்களுடன் செல்ஃபி எடுப்பதைக் காட்டுகின்றன. “எனது பழைய ஹார்ட் டிரைவை மீட்டெடுத்தவுடன், கடந்த கால நண்பர்கள் எனக்கு அனுப்பிய செல்ஃபிகளின் புதையலைக் கண்டுபிடித்தேன்” என்று ஜியோ ஜான் முள்ளூர் இன்ஸ்டாகிராமில் நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
‘இந்தியாவில் இருந்து அன்பு’ என்று ஒரு விட்டர் பயனர் கம்மெண்ட் செய்துள்ளார். இது ஒரு அதிசய படைப்பு, முக்கிய கதாப்பாத்திரத்தைச் சுற்றி நீங்கள் உருவாக்கிய ஆழமான, விவரங்கள் மற்றும் சூழல் ஆகியவை மிகச் சரியாக சமநிலையில் உள்ளன!! சில பழைய மாஸ்டர்கள் கிராஸ்ஓவருடன் சில நவீன மாஸ்டர்களைப் பார்க்க விரும்புகிறேன்” என்று மற்றொரு நபர் பதிவிட்டுள்ளார். “நான் முழுத் தொடரையும் விரும்புகிறேன்! நல்லதோ கெட்டதோ அவர்கள் அனைவரும் உண்மையான மனிதர்கள், தொழில்நுட்பம் இருந்தால் செல்ஃபி எடுத்திருப்பார்கள் என்பது நல்ல நினைவூட்டல்!” என்று மற்றொரு நெட்டிசன் கம்மெண்ட்ன் செய்துள்ளார்.
சமீபத்தில், ஜூலியன் என்ற ஆர்டிஃபிசியல் இண்டெலிஜென்ஸ் கலைஞர், அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவும், ஜெர்மனியின் முன்னாள் அதிபர் ஏஞ்சலா மெர்க்கலும் கடற்கரையில் உல்லாசமாக இருப்பதைக் காட்டும் புகைப்படங்களை உருவாக்கினார். ஜூலியன் இன்ஸ்டாகிராமில் உலகத் தலைவர்கள் கொண்டாடும் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்டார். அலைகளை ரசிப்பது முதல் மணல் அரண்மனைகளை உருவாக்குவது மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது வரை, இரு தலைவர்களும் நிதானமான மற்றும் மகிழ்ச்சியான மனநிலையில் இருப்பதாக உருவாக்கி இருந்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.