/indian-express-tamil/media/media_files/2025/09/02/jayakumar-pat-nainar-2-2025-09-02-18-55-34.jpg)
டி.ஜெயக்குமார் பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை செல்லமாக கன்னத்தில் தட்டிக்கொடுத்த வீடியோ Photograph: (Image Source: @PttvNewsX)
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தி.மு.க-வை வீழ்த்த வேண்டும் என கடும் வியூகம் வகுத்து வருகிறது. எதிர்க்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்று தமிழ்நாடு முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான டி.ஜெயக்குமார், பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை கன்னத்தில் செல்லமாக தட்டிக்கொடுக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் புயலைக் கிளப்பி வருகிறது.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை கன்னத்தில் செல்லமாக தட்டி பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்ட கழக அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் அண்ணன் #Dஜெயக்குமார் அவர்கள்...❤️🫂#DJ@djayakumaroffcl@NainarBJP@AIADMKOfficial@satyenaiadmk@prof_vinodkumarpic.twitter.com/UQ8hmNMRLU
— Pavithran RM- SayYesToWomenSafe&AIADMK (@PavithranRm) September 2, 2025
சென்னையில் நடைபெற்ற ஒரு திருமண விழாவில் ஜெயக்குமார் மற்றும் நயினார் நாகேந்திரன் இருவரும் சந்தித்துக்கொண்டனர். அப்போது, ஒருவருக்கொருவர் சிரித்தபடி பேசிக்கொண்டிருந்தனர். உரையாடலின் முடிவில், ஜெயக்குமார் மிகுந்த நெருக்கத்துடன் நயினார் நாகேந்திரனின் கன்னத்தில் மெதுவாகத் தட்டிக்கொடுத்தார். இந்தச் செயல், அவர்களின் தனிப்பட்ட உறவு எவ்வளவு இணக்கமாக இருக்கிறது என்பதைப் பலருக்கும் உணர்த்தியது.
பொதுவாக, கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மரியாதையாக ஒரு சடங்கு போல, வணக்கம் சொல்வதுடன் முடிந்துபோகும். ஆனால், ஜெயக்குமார் - நயினார் நாகேந்திரனின் இந்த சந்திப்பு அவர்களிடையே தனிப்பட்ட நெருக்கமான நட்பைக் காட்டுவதாக உள்ளது.
தற்போது தமிழ்நாடு பா.ஜ.க தலைவராக உள்ள நயினார் நாகேந்திரன் அ.தி.மு.க.வின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் இருந்துள்ளார். 2017-ஆம் ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த இவர், 2021 சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை கன்னத்தில் செல்லமாக தட்டிக்கொடுக்கும் ஒரு வீடியோ மூலம் இருவர் இடையேயான நட்பைக் காட்டுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.