சமூக ஊடகங்களின் காலத்தில், அன்றாட அரசியல் நிகழ்வுகளுக்கு உடனுக்கு எதிர்வினையாற்றுபவர்கள் என்றால் மீம்ஸ் கிரியேட்டர்கள் முன்னணியில் நிற்கிறார்கள். அரசியல் மீம்ஸ்கள் நகரிகமான மொழியில் நகைச்சுவையாக அரசியல் அங்கதமாக இருந்தால் கட்சி பேதங்களைத் தாண்டி கவனம் பெறும். சமூக ஊடகங்களில் இன்று கவனம் பெற்ற அரசியல் மீம்ஸ்களை இங்கே தொகுத்து தருகிறோம்.
மயக்குநன் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “நான் ஓபிஎஸ் பக்கமும் இல்லை, இபிஎஸ் பக்கமும் இல்லை” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு, “ஏன்… மெயின் ரோடு பக்கமா ஒதுங்கிட்டீங்களோ..?!” என்று கவுண்டர் மீம்ஸ் மூலம் கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
வசந்த் என்ற ட்விட்டர் பயனர், “நான் ஓபிஎஸ் பக்கமும் இல்லை, இபிஎஸ் பக்கமும் இல்லை” என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதற்கு “அப்ப அமித்ஷா பக்கமா?” என்று மீம்ஸ் மூலம் கிண்டல் செய்துள்ளார்.
வசந்த் மற்றொரு மீம்ஸில், “எடப்பாடி ஆதரவாளர்கள் எல்லாரையும் ஓபிஎஸ் அண்ணன் கூப்பிடுறாரு. உங்ககிட்ட அண்ணன் ஸாரி கேட்கனுமாம்.” என்று அதிமுகவினரை கலாய்த்துள்ளார்.
ஜோ என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், “எப்போலாம் எதிராளி கேக்குற கேள்விக்கு உன்கிட்ட பதில் இல்லாம, அவங்கள சமாளிக்க முடியாம போகுதோ,
அப்போலாம் நீ எடுக்க வேண்டிய ஆயுதம் "தேசப்பக்தி'. அதை எடுத்து வீசு. அது உனக்கு கை கொடுக்கும்..” என்று பாஜகவினரை கிண்டல் செய்துள்ளார்.
கட்டனூர் சேக் என்ற பெயரில் உள்ள ட்விட்டர் பயனர், அக்னிபாத் திட்டம் தொடர்பாக பதிவிட்டுள்ள மீம்ஸில், “நாலு வருஷ காண்ட்ராக்ட் முடிஞ்சது… பேமண்ட் குடுங்க…
ஜீ - கேண்ட்டீன்ல சாப்ட்டது.. பார்டர சுத்தி பாத்ததுன்னு கணக்கு சரியாப்போச்சு… கெளம்பு…” என்று பாஜகவினரைக் கிண்டல் செய்துள்ளார்.
கட்டனூர் சேக் மற்றொரு மீம்ஸில், வட மாநிலங்களில் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் குறித்து இம்ஸை அரசன் 23ஆம் புலிகேஸி மீம்ஸ் போட்டு கலாய்த்துள்ளார். “நம்மள எதிர்த்து புரட்சி பண்ற அளவுக்கு எப்படி புத்தி வந்திச்சு வடக்கன்களுக்கு?
எல்லாம் பானிபூரி விக்க தமிழ்நாட்டுக்கு போன சகவாசம்தான் மன்னா.” என்று கிண்டல் செய்துள்ளார்.
திமுகவின் முகத்திரையை கிழிக்க ஈபி௭ஸ் வேண்டும் என்று அதிமுக வேடசந்தூர் முன்னாள் ௭ம்௭ல்ஏ பரமசிவம் கூறியதற்கு, கட்டனூர் சேக் தான் பதிவிட்டுள்ள மீம்ஸில், “போ.. போ.. முதல்ல உங்க ஒவ்வொருத்தரோட முகத்கிரை கிழியாம பாத்துக்க.. போ..” என்று கவுன்ட்டர் கொடுத்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.